பாஜக செலுத்திய விஷத்தை அகற்ற 15 ஆண்டுகள் ஆகும்.! நிர்மலா சீதாராமன் கணவர் கடும் விமர்சனம்.!

Published by
மணிகண்டன்

2024 தேர்தலில் தோற்றாலும் பாஜக செலுத்திய விஷத்தை அகற்ற 15 ஆண்டுகள் ஆகும் என நிர்மலா சீதாராமன் கணவர் பிரகலா பிரபாகர் விமர்சனம் செய்துள்ளார்.

The Crooked Timber of New India – Essays on a Republic in Crisis எனும் புத்தகத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கணவரும், பொருளாதார நிபுணருமான பிரகலா பிரபாகர் எழுதியிருந்தார். இந்த புத்தகம் மீதான கலந்துரையாடல் அண்மையில் சென்னையில் தனியார் பத்திரிக்கை மூலம் நடைபெற்றது. அதில், மத்திய அரசு மீது பல்வேறு விமர்சனங்களை அவர் முன்வைத்தார்.

அதில், மத்திய அரசின் நிதி ஆயோக் சமீபத்தில் பல பரிமாண வறுமைக் குறியீட்டின் (Multidimensional Poverty Index -MPI) அடிப்படையில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், 2015-16 மற்றும் 2019-21 க்கு இடைப்பட்ட காலத்தில் 13.5 கோடி மக்கள் பல்வேறு பரிமாணம வறுமையிலிருந்து வெளியேறியுள்ளனர் என குறிப்பிடப்பட்ள்ளதை பிரகலா பிரபாகர்  விமர்சித்தார்.

வருமான உயர்வை மட்டுமே மத்திய அரசு கணக்கில் கொண்டுள்ளது. ஆனால், மற்ற காரணிகளான சுகாதாரம், மக்களின் நிலை ஆகியவற்றை மத்திய அரசு கருத்தில் கொள்ளவில்லை என விமர்சித்தார். இருந்தாலும், வருமானத் தரவுகளும் எந்தவித ஏற்றமும் இல்லாமல் இருப்பதாக பிரகலா பிரபாகர் விமர்சித்து உள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் ஆனது கொரோனாவுக்கு முன்னர் உள்ள நிலையை கூட இன்னும் நாடு திரும்பவில்லை. இப்படியான சூழலில் 13 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டதாக கூறுவது எப்படி சரியாகும்? வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தோற்றாலும் கூட பாஜக செலுத்திய விஷத்தை நாட்டில் இருந்து அகற்ற 15 ஆண்டுகள் ஆகும் என மத்திய நிர்மலா சீதாராமன் கணவர் பிரகலா பிரபாகர் விமர்சனம் செய்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

6 minutes ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

23 minutes ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

1 hour ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

1 hour ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

3 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

4 hours ago