New Parliament Building [Image Source : Twitter/@ANI]
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை, பிரதமர் நரேந்திர மோடி இம்மாத இறுதியில் திறந்து வைக்க வாய்ப்பு என தகவல்.
டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை இம்மாத பிரதமர் மோடி திறந்து வைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ள புதிய பார்லிமென்ட் கட்டடம், பிரதமர் மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியை முன்னிட்டு, மே 28ம் தேதி திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் பிரதமராக பிரதமர் மோடி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு மே 26, 2014 அன்று பதவியேற்றார். இந்த சமயத்தில், இன்று டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திடீர் பார்வையிட்டார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள வசதிகளை பார்வையிட்டதோடு, பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்.
இதனால், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை இம்மாத பிரதமர் மோடி திறந்து வைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜூலை மாதம் புதிய கட்டிடத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 2020 டிசம்பரில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன்படி, புதிய நாடாளுமன்ற கட்டடம், 970 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…