Naresh Goyal [File Image]
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் இருந்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனமானது ரூ.848.86 கோடி கடனாக பெற்றுள்ளது. அதில் ரூ. 538.62 கோடி கடன் தொகை இன்னும் நிலுவையில் உள்ளதாக கனரா வங்கி புகார் அளித்து இருந்தது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனமானது, கடந்த ஏப்ரல் 2019-ம் ஆண்டு தங்கள் வர்த்தக செயல்பாடுகளை நிறுத்தியது. மேலும், அதன் நிறுவனர் நரேஷ் கோயல் விமான நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து கடந்த மார்ச் மாதம் விலகைவிட்டார்.
இந்நிலையில் இந்த கடன் வழக்கை பதிவு செய்துகொண்ட அமலாக்கத்துறையினர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி , ஜெட் ஏர்வேஸ் நிறுவன முக்கிய அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் நேற்று நரேஷ் கோயல் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருந்தார்.
இதனை அடுத்து நேற்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் நீண்ட நேர விசாரணைக்கு நரேஷ் கோயல் உட்படுத்தபட்டு இருந்தார். இந்த விசாரணை முடிவில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் நரேஷ் கோயலை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
சென்னை : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று…
பீகார் : இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ் அரசு…
டெல்லி : கடந்த மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். அதில்…
நெல்லை : 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்,…
லண்டன் : 'ஹாரி பாட்டர்' படத் தொடரில் ஹெர்மியோன் கிரேன்ஜர் வேடத்தில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன்…