[Image source : PTI]
இன்று மதியம் 1 மணிக்கு சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதற்கான கவுண்ட்டவுன் ஆரம்பமாகவுள்ளன.
நாளை இந்தியா ஒரு பெருமை மிகு தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது என்றே கூற வேண்டும். நாளை சந்திராயன்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. அதற்கான பரிசோதனை, சோதனை ஓட்டம் என அனைத்தும் நிறைவடைந்து எரிபொருள் நிரப்பும் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டி வருகின்றன. கடந்த முறை செய்த சிறு தவறுகளையும் தற்போது தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவி கொண்டு அதனை சரி செய்து மேம்படுத்தி புதிய உத்தியோகத்துடன் விண்ணில் பாய சந்திராயன்-3 தயாராகிவிட்டது.
இந்த சந்திராயன்-3 விண்கலத்தில் மூன்று முக்கிய பகுதிகள் உள்ளன ஒன்று புரபுல்சன் பகுதி மற்றொன்று ரோவர் மற்றும் லேண்டர் பகுதி இதில் புரபுல்சன் பகுதி ரோவர் மற்றும் லேண்டர் பகுதியை நிலவின் 100 கிலோமீட்டர் தொலைவிற்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு லேண்ட் பகுதி நிலவில் மெதுவாக தரையிறங்கப்படும். ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் கருவி ஆகும். இந்த மூன்று பகுதிகளுக்கும் இடையேயான ரேடியோ அலைவரிசைகளை பரிசோதிக்கப்பட்டு உள்ளது. இதற்கான 251/2 மணி நேரம் கவுண்டவுன் இன்று பகல் ஒரு மணிக்கு துவங்க உள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் உள்ள இரண்டாவது ஏவுதளத்திலிருந்து நாளை இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திராயன்-3 விண்வெளி ஆய்வுக்காக விண்ணில் ஏவப்பட உள்ளது. இது இந்தியாவை உலக அரங்கில் விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சொல்லும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…
சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…
சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…
டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…