மகாராஷ்டிராவில் தங்களது தலைமுறையில் பிறந்த முதல் பெண்குழந்தையை வரவேற்க அட்டகாசமான வரவேற்பு கொடுத்த தந்தை.
மகாராஷ்டிர மாநிலம், புனே மாவட்டம், ஷெல்காவான் பகுதியை சேர்ந்த தம்பதியினர் விஷால் – ஜரேகரின். இவர்களுக்கு திருமணம் முடிந்த நிலையில், விஷாலுக்கு தங்களது குடும்பத்தில் பல தலைமுறைகளாக பெண் குழந்தை இல்லை என்ற ஏக்கம் இருந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்தின்போது மனைவி அவரது அம்மா வீட்டில் இருந்துள்ளார். இதனிடையே 3 மாதத்திற்கு பின் அவர் தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். தனது தலைமுறையில் முதல் பெண் குழந்தை பிறந்துள்ளதை வரவேற்கும் வண்ணம் தனது வீட்டிற்கு மனைவியையும், குழந்தையையும் அழைத்து வரும்போது மாவட்டமே வியக்கும் வண்ணம் பல தடபுடலான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
அதன்படி அவர் தனது மாமியார் வீட்டிலிருந்து மனைவியை அழைத்து வரும்போது ஒரு லட்சம் ரூபாய் ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து அந்த ஹெலிகாப்டர் தனது வீட்டிற்கு தனது மனைவி மற்றும் குழந்தையை அழைத்து வந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் எங்கள் வீட்டிற்கு வாரிசாக வரும் முதல் பெண் குழந்தை என்னுடைய குழந்தை தான். அதனால் தான் எங்கள் வீட்டு மகளை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகளைச் செய்தோம் என தெரிவித்துள்ளார். விஷாலின் இந்த நடவடிக்கை அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…