பிலிப்பைன்ஸில் பெண் ஒருவர் ஆன்லைனில் சிக்கன் ஆர்டர் செய்ததில் டவள் வந்ததால் அதிர்ச்சி.
பிலிப்பைன்ஸில் பெண் ஒருவர் ஆன்லைன் மூலமாக வறுத்த சிக்கன் ஆர்டர் செய்தபோது சிக்கனுக்கு பதிலாக டவள்(துண்டு) வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஜொல்லிபீ என்பது பிலிப்பைன்ஸ் ஜொல்லிபீ ஃபுட்ஸ் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான ஃபாஸ்ட் ஃபுட் உணவகங்களில் ஒன்று, ஜொல்லிபீ உணவகம் வறுத்த கோழி விற்பனையில் பிரபலமானது.
அலிக் பெரெஸ் என்ற பெண் தனது மகனுக்காக செவ்வாயன்று பிலிப்பைன்ஸில் உள்ள ஜொல்லிபியில் ஃப்ரைட் சிக்கன் ஆர்டர் செய்திருந்தார், ஆர்டர் டெலிவரி செய்யப்பட்டபின், அவர் தன் மகனுக்காக சில சிக்கனை வெட்ட முயன்றார், அப்போது அவர் ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்தார்.
அதில் நன்றாக வறுக்கப்பட்ட டவள் ஒன்றை பார்த்ததும் அந்த பெண் விரக்தியின் உச்சத்தை சென்றார். இதைப்பற்றி அந்த பெண் கூறுகையில், இந்த நிகழ்வு தன்னை தாமதமாக விரக்தியடையச் செய்ததாகவும், என் மகனுக்கு கோழியை ஆர்டர் செய்தேன் அதை என் மகன் கடிக்க முயற்சித்தான், பின்பு நான் அதை வெட்டும்போது அது மிகவும் கடினமாக இருந்தது, பின்பு என் கைகளால் அதை உடைத்து பார்க்கும் போது அது டவளாக இருந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் பெரேஸ், மக்கள் தங்கள் உணவில் “வித்தியாசமான பொருட்களை” கண்டுபிடிப்பதைப் பற்றி புகார் கூறுகிறார்கள். “அது உண்மையில் நடக்கும் என்று இப்போது எனக்குத் தெரிந்தது என்று கூறியுள்ளார். இது மோசமானது என்றும் இதற்காக என்னை அமைதிப்படுத்திக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த டவள் மூலம் மற்ற எந்தெந்த உணவுகள் அந்த உணவகத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் என்று நம்மால் சிந்தித்து கூட பார்க்க முடியாது என்று கூறியுள்ளார். இதன் பின் ஜொல்லிபீ ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதாகவும், அந்த உணவகம் 3 நாட்கள் மூடப்பட்டு, சம்பவம் குறித்து முற்றிலுமாக விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
ஜொல்லிபியின் அனைத்து கிளைகளுக்கும் உணவு தயாரிப்பு முறைகளை கண்டிப்பாக கடைபிடிப்பதை உறுதி செய்வதற்காக நினைவூட்டல்களை அனுப்பியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…
வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…
டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…
தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…
வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…