Supreme court of india [Image source : PTI]
அதிகாரிகள் நியமனம் தொடர்பான அவசர சட்டத்துக்கு எதிரான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து உத்தரவு.
டெல்லியில் அதிகாரிகள் நியமனம் பற்றிய அவசர சட்டத்திற்கு எதிரான வழக்கு அரசியல் சாசன மர்வுக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதாவது, மத்திய அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து டெல்லி அரசு தொடர்ந்த வழக்கு அரசியல் சாசன மர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
அதன்படி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் அவரச சட்டத்தை எதிர்த்து டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். டெல்லியில் அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் அவசர சட்டம் இயற்றப்பட்டது.
டெல்லியில் குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிடை மாற்றம் உள்ளிட்டவை குறித்த அதிகாரம் துணை நிலை ஆளுநர், மத்திய அரசிடம் இருந்த நிலையில், அதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி 2019ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதிகாரிகள் நியமனம், மாற்றம் ஆகியவற்றில் டெல்லி அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு அளித்தது.
இதன்பின் டெல்லியில் முக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து, டெல்லியில் குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றம் உள்ளிட்ட பணிகளை நிர்வகிக்க சிவில் சர்வீஸ் ஆணையத்தை அமைத்து அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
மத்திய அரசின் அவரச சட்டம் டெல்லி அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் இருப்பதாகவும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நீர்த்துப் போகும் வகையில் இருப்பதாகவும் கூறி ஆம் ஆத்மி உச்ச நீதிமன்றத்தி மனுத் தாக்கல் செய்து இருந்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பகுதி அமர்வு விசாரித்து வந்த நிலையில், தற்போது 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…