Congress president Mallikarjun Kharge [Image Source : Twitter/@ANI]
மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்காமல் இருந்த காரணத்தால் , மத்திய அரசு மீது எதிர்க்கட்சியினர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை மக்களவையில் தாக்கல் செய்து உள்ளனர்.
இந்த தீர்மானம் மீதான விவாதம் வரும் 8ஆம் தேதி துவங்க உள்ளது. 10ஆம் தேதி பிரதமர் மோடி விளக்கம் அளிக்க உள்ளார். அன்றே வாக்கெடுப்பும் நடைபெறுகிறது. இதற்கிடையில் ஏற்கனவே எதிர்க்கட்சி எம்பிக்கள் மணிப்பூர் சென்று கள நிலவரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் , கூட்டாக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தனர். அதன்பின் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை அவை தலைவர் ஏற்கவில்லை.
மணிப்பூரில் நாங்கள் நடத்திய ஆய்வு குறித்து அவைகள் தெரிவிக்க அனுமதிக்கவில்லை. மணிப்பூர் விவகாரத்தை குறித்து பிரதமர் மோடி அவையில் பேச தயங்குவது ஏன்? 267 தீர்மானத்தின் படி ஏன் விவாதம் நடத்த தயங்குகின்றனர் என கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று…
பீகார் : இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ் அரசு…
டெல்லி : கடந்த மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். அதில்…
நெல்லை : 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்,…
லண்டன் : 'ஹாரி பாட்டர்' படத் தொடரில் ஹெர்மியோன் கிரேன்ஜர் வேடத்தில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன்…