Categories: இந்தியா

இந்தியா கூட்டணியின் 3வது கூட்டத்தில் பங்கேற்பேன்: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!

Published by
கெளதம்

மும்பையில் வரும் 31ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் கலந்து கொள்வோம் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் தனித்து போட்டியிட உள்ளதாக கூறியது ஆம் ஆத்மி கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே வாக்குவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், மும்பையில் நடைபெறும் எதிர்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக அர்விந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அர்விந்த் கெஜ்ரிவால், ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெற இருக்கும் இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளார். வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்கொள்வதற்காக எதிர்க்கட்சிகள் கூட்டணியின் மூன்றாவது கூட்டம் இதுவாகும்.

இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் ஜூன் மாதம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் கடந்த மாதம் பெங்களூருவிலும் நடைபெற்றது. காங்கிரஸின் ஆதரவுடன் சிவசேனா (யுபிடி) மற்றும் என்சிபியின் சரத் பவார் பிரிவு கூட்டாக கூட்டத்தை நடத்துகிறது.

Published by
கெளதம்

Recent Posts

எலான் மஸ்க் கட்சி தொடங்கியது முட்டாள்தனமானது…டொனால்ட் டிரம்ப் விமர்சனம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…

31 minutes ago

ஸ்கெட்ச் போட்ட AI..ஒரே மாதத்தில் ரூ.10 லட்சம் கடனை அடைத்த அமெரிக்க பெண்!

டெலவேர்  : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…

1 hour ago

உங்க கொள்கைக்கும் எங்க கொள்கைக்கும் ரொம்ப தூரம்”… த.வெ.க குறித்த கேள்விக்கு சீமான் பதில்!

சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…

2 hours ago

”புதிய கட்சி தொடங்கிய ஈலோன் மஸ்க்” – டிரம்ப் என்ன சொன்னார் தெரியுமா?

வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர்  எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…

2 hours ago

”பிரிக்ஸை ஆதரிக்கும் நாடுகளுக்கு 10 % கூடுதல் வரி” – உலக நாடுகளை எச்சரிக்கும் டிரம்ப்.!

வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…

3 hours ago

18 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தை லாவகமாக பிடித்த பெண் வன ஊழியரின் துணிச்சல்.!

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…

3 hours ago