காவேரியில் இருந்து தமிழகத்திற்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு.! தொடரும் பரிசல் போக்குவரத்து தடை.!

Published by
மணிகண்டன்

தமிழகத்திற்கு காவேரி மேலாண்மை வாரிய உத்தரவின் படி ஜூன், ஜூலை மாதத்தில் திறந்துவிடபட வேண்டிய தண்ணீரின் அளவில் மிக குறைந்த அளவில் மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், உரிய அளவில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்து வைத்துவருகிறது .

இந்நிலையில் காவேரியில் இருந்து குறிப்பிட்ட அளவு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு உத்தரவிட்டு இருந்தது. தற்போது காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு அதிகரித்ததன் காரணமாக கர்நாடகாவில் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீரின் வரத்து அதிகமாகியுள்ளது.

இதன் காரணமாக, கபினி அணையில் இருந்து 5 ஆயிரம் கனஅடி அளவு தண்ணீரும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 15ஆயிரம் கனஅடி அளவு தண்ணீரும் தமிழகத்திற்கு திறந்துவிடப்படுகிறது. இதனால் காவேரியின் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

நேற்றுவரை 14,000 கனஅடி நீர் வந்துகொண்டிருந்த நிலையில், இன்று நீர் வரத்து 15,000 கன அடியாக உயர்ந்துள்ளது. காவேரியில் நீர் வரத்து அதிகமான காரணத்தால் ஒகேனக்கல் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு பரிசல் போக்குவரத்து 4வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

14 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

14 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

15 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

15 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

16 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

18 hours ago