ADMK Case MHC [File Image]
கட்சி விதிகள் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டவை அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு வாதம்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று மூன்றாவது நாளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தினங்களாக நடைபெற்ற விசாரணையின்போது, இபிஎஸ் தரப்பில் ஆஜரானாக வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார்.
இன்று மீண்டும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இபிஎஸ் தரப்பு வாதத்தில், கட்சி விதிப்படி, ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியுள்ளோம், அவரை மீண்டும் சேர்த்தால் குழப்பம் அதிகரிக்கும். ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால், எந்த விளக்கமும் கேட்காமல் தன் சொந்த தம்பி ராஜாவை கட்சியை விட்டு நீக்கி ஓ.பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுத்தார்.
அதே நடைமுறை தான் இவரது நீக்கத்திலும் பின்பற்றப்பட்டுள்ளது. கட்சி விதிகள் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டவை அல்ல. காலத்திற்கு ஏற்ப கட்சி விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கை ஜூன் 15க்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். இதுவரை இபிஎஸ் தரப்பு வாதம் கேட்கப்பட்டு வந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பு பதில் வாதத்திற்கு விசாரணையை ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடப்படுகிறது.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…