[file image]
அதிமுகவில் புதிய புதிய மாவட்ட செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள் மற்றும் கொள்கை பரப்பு இணை செயலாளரை நியமனம் செய்து அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோன்று, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக ஜெ.சீனிவாசன், பெரம்பலூர் மாவட்ட செயலாளராக இளம்பை தமிழ்செல்வன், கும்பகோணம் மாநகர செயலாளராக ராம.ராமநாதன், தஞ்சை மாநகர செயலாளராக சரவணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளராக சு.ரவி, ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளராக சுகுமார், திருவண்ணாமலை மாவட்ட செயலாளராக இராமச்சந்திரன், மத்திய மாவட்ட செயலாளராக ஜெயசுதா, வடக்கு மாவட்ட செயலாளராக தூசி மோகன், தெற்கு மாவட்ட செயலாளராக கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மாவட்ட செயலாளர்களாக நியமனம் செய்து அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
அதேபோல், அதிமுக அமைப்பு செயலாளர்களாக பாஸ்கரன், முன்னாள் எம்பி அன்வர் ராஜா, ஆர்.மனோகரன், வி.ராமு, ராயபுரம் மனோ, துரை செந்தில், ஆர்.காந்தி ஆகியோரை நியமனம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட அன்வர் ராஜாவுக்கு அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளராக நடிகை விந்தியா நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக்கொள்வதாக அறிவித்திருந்தார் நிலையில், புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…