[Image Source : FILE PHOTO/ PTI]
தமிழ்நாட்டில் ஜூலை 3ம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரி தொடங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவிப்பு.
தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 3-ஆம் தேதி திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலைக் கல்லூரிகளில், மொத்தம் 1,07,299 மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதுவரை 75811 மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீதமுள்ள இடங்களுக்கு இன சுழற்சி முறையில் (Rule of Reservation) மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஜுன் 30 வரை முதலாமாண்டு மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறும் என்றும் முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரி ஜுலை 3 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…