Tamilnadu CM MK Stalin [Image source : Twitter/@mkstalin]
மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பான பதைபதைக்க வைக்கும் கொடூர சம்பவம் தொடர்பாக தனது கடும் கண்டனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் துவங்கிய இரு சமூகத்திற்கு இடையேயான கலவரமானது இன்று வரை ஓய்ந்தபாடில்லை. இன்னும் அங்காங்கே வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் பலமாக வலியுறுத்தி வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இது தொடர்பாக தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டார் இருந்தும் இன்னும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. மக்கள் பாதுகாப்பு கருதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தான் நேற்று சமூக வலைதளத்தில் மனதை பதைபதைக்க வைக்கும் ஒரு வீடியோ வெளியாகி அனைவரது மனதையும் உலுக்கியது. அதில் மணிப்பூர் மாநில பகுதியில் 2 பெண்களை ஒரு கொடூர கும்பல் நிர்வாணப்படுத்தி அழைத்து செல்கிறது. இந்த கொடூர வீடியோ இணையத்தில் பரவ ஆரம்பித்ததும் பலரும் தங்கள் கண்டங்களை வலுவாக பதிவு செய்து வருகின்றனர். ஆளும் பாஜக கட்சியில் இருப்பவர்கள் கூட இந்த சம்பவத்திற்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான வன்முறையால் முற்றிலும் மனம் உடைந்து திகைப்படைந்ததுள்ளேன். நமது மனசாட்சி எங்கே? வெறுப்பும் விஷம் மனித குலத்தின் ஆன்மாவையே வேரோடு பிடுங்குகிறது. இத்தகைய அட்டூழியங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நின்று, பச்சாதாபமும் மரியாதையும் கொண்ட சமுதாயத்தை வளர்ப்பதற்கு உழைக்க வேண்டும். மணிப்பூரில் அமைதி திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும். என அதில் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வரும் வீடியோ இரு பெண்கள் பற்றியது என்றும், அதில் அவர்கள் நிர்வாணமாக இருப்பதாலும் பல்வேறு தலைவர்கள் அதனை பகிர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…