EdappadiPalaniswami about udhayanidhi stalin [File Image]
தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் நீட் தேர்வை கண்டித்து இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், நீட் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடத்திய உண்ணாவிரதம் ஒரு நாடகம் என இன்று மதுரை வலையங்குளத்தில் நடைபெற்று வரும் “பொன்விழா எழுச்சி” மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது.
2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலின் போது உதயநிதி ஸ்டாலின் அவர்கள்தேர்தல் பிரச்சாரத்தின் போது, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றுதான் சொன்னீங்களா? இல்லையா? பிறகு ஏன் ரத்து செய்யவில்லை? உதயநிதி ஸ்டாலின் அவர்களே மாணவர்களே ஏமாற்றாதீங்க ஸ்டாலின் அவர்களே மாணவர்களை ஏமாற்றாதீங்க நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக அதை தடுத்து நிறுத்தியதற்கு போராடியது அதிமுக.
ஏதேதோ சொல்லி இன்று உண்ணாவிரதம் இருந்து நாடகம் ஆடுகிறார்கள் இவர்களே கொண்டு வந்து இவர்களை ரத்து செய்வதற்கு நாடகமும் ஆடுகின்ற ஒரே கட்சி திமுக கட்சி தான். திமுக ஆட்சியில் இருந்தபோது கச்சத்தீவை மீட்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காட்டத்துடன் கேள்வியும் எழுப்பியுள்ளார்.
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…
சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…