death [Imagesource : Theindianexpress]
கண்ணெதிரே காதலன் கொலை செய்யப்பட்டதால், காதலி தூக்கிட்டு தற்கொலை.
கோவை மாவட்டம் சுந்தராபுரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மகன் பிரசாந்த். இவர் தனியார் நிறுவனத்தில் லோடுமேன் ஆக வேலை செய்து வருகிறார். பிரசாந்த் வசந்த நகர் பகுதியை சேர்ந்த தன்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், ஆரம்பத்தில் இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், திங்கள்கிழமை தான்யா பிறந்தநாளன்று நள்ளிரவில் வாழ்த்து கூறுவதற்காக பிரசாந்த் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.12 மணியளவில் அவர் வீட்டின் கதவை தட்டியபோது தன்யாவின் உறவினர் மற்றும் அவரது தந்தை இருவரும் கதவை திறந்துள்ளனர்.
பிரசாந்த் குடிபோதையில் இருந்ததை பார்த்த தன்யாவின் உறவினர் விக்னேஷுக்கும் பிரசாந்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில் பிரசாந்த் விக்னேஷை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் அங்கிருந்த கத்தியை எடுத்து பிரசாந்தை குத்தியுள்ளார்.
இதனையடுத்து பிரசாந்தை அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், தன்யாவின் உறவினரான கால் டாக்ஸி டிரைவர் விக்னேஷ் (29), மற்றும் அவரது தந்தை மகாதேவன் (40) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் காதலனை வெட்டி கொலை செய்ததால் மனம் உடைந்த காதலி தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவர், தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…