thol. thirumavalavan and tamilisai soundararajan [Image source : file image ]
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, வேடிக்கையாக இருக்கிறது என தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறும்போது ” புதுச்சேரியில் இயங்கி வரும் ஜிப்மர் மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ வசதிகள் மாற்றப்பட்டது குறித்து தனியாரிடம் தாரைவாக்க முயற்சிக்கிறார்களோ என்ற ஐயம் எழுந்துள்ளது. இந்த கட்டணம் வசூலிக்கும் முறையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இந்த ஜிப்மர் மருத்துவமனையில் புதுச்சேரியில் மட்டுமில்லாமல் தமிழ் நாட்டில் இருக்கும் ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த கட்டண முறைக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தினோம் அந்தக் கூட்டத்தில் நான் பேசியதை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மிக கடுமையாக கண்டித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து புதுச்சேரியை பற்றி ஏன் பேசவேண்டும் வேண்டும் தமிழிசை சௌந்தரராஜன் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. குஜராத்தைச் சேர்ந்த பிரதமர் மோடிக்கு கர்நாடகாவில் என்ன வேலை என்று கேட்டால் சரியாக இருக்குமா..? அது போல அவர் கூறுவது இருக்கிறது. மக்கள் நலம் கருதி எந்த மண்ணிலே நின்று கொண்டு போராடினாலும் அது நம்மளுடைய கடமை என்பதே உணராமல் ஆளுநர் பொறுப்பில் இருந்து கொண்டு அவர் இவ்வாறு பேசுவதை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஆளுநரின் இந்த அணுகுமுறையை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது” என கூறியுள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…