P Chidambaram [Image Source : PTI]
கருப்பு பணத்தை பதுக்கி வைக்க மட்டுமே ரூ.2,000 உதவியுள்ளது என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்.
ரூ.2000 நோட்டு என்ற முட்டாள்தனமான முடிவை திரும்பப் பெற்றதில் மகிழ்ச்சி என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், சாமானிய மக்களிடம் ரூ.2,000 நோட்டு கிடையாது, 2016-ல் அதை அறிமுகம் செய்தபோதே பொதுமக்கள் அதை நிராகரித்துவிட்டனர்.
அதை பயன்படுத்தி வந்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும். கருப்பு பணத்தை பதுக்கி வைக்க மட்டுமே ரூ.2,000 உதவியுள்ளது. ரூ.2,000 நோட்டை மாற்ற எந்த ஆவணங்களும் தேவையில்லை என வங்கிகள் அறிவித்துள்ளன. இது கருப்பு பணம் வைத்திருப்பவர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் வகையில் உள்ளது.
7 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.2,000 நோட்டு என்ற முட்டாள்தனமாக முடிவை திரும்ப பெற்றதில் மகிழ்ச்சி. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த அடையாளமும், படிவங்களும், சான்றுகளும் தேவையில்லை என்று வங்கிகள் தெளிவுபடுத்தியுள்ளன. கறுப்புப் பணத்தை வெளிக்கொணரவே 2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்ற பா.ஜ.க.வின் முடிவு முறியடிக்கப்பட்டது. கறுப்புப் பணத்தை வேரறுக்கும் அரசின் குறிக்கோளுக்கு இவ்வளவுதான் காரணம் என்றுள்ளார்.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…