tasmac openingtime [Image-TOI & Indiapostenglish]
தமிழகத்தின் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தில் மாற்றமிருக்காது என அமைச்சர் முத்துசாமி விளக்கம்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் காலையிலேயே திறக்கப்படுவதாகக் கூறப்பட்டுவந்த நிலையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி, இதற்கு மறுப்பு தெரிவித்து பதில் அளித்துள்ளார். டாஸ்மாக் கடைகள் வழக்கம் போல் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்குதான் மூடப்படும் என அமைச்சர் முத்துசாமி விளக்கமளித்துள்ளார்.
மேலும் கணினி வழி ரசீது, கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மது குடிப்போர் எண்ணிக்கையை குறைக்க மதுக்கடைகள் மூலமாகவே நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. முதன்முறை மதுகுடிக்க வருவோரை அழைத்து அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் பணியாளர்களின் பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனவும் அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்து பேசியுள்ளார்.
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…