தமிழ்நாடு

‘Keep Shining’ – செஸ் வீரர் பிரஞானந்தாவுக்கு முதல்வர் வாழ்த்து..!

Published by
லீனா

உலக கோப்பை செஸ் தொடர் போட்டி அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்றது. இந்த அரை இறுதி போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னை சேர்ந்த  பிரஞானந்தா அமெரிக்காவின் பேபியோனா கருணாவுடன்  மோதினார். இந்த நிலையில்,  முதல் ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் 78-வது காய் நகர்தலில் டிரா செய்தார்.

இந்த நிலையில், நேற்று  முன்தினம் அரை இறுதி சுற்றின் 2-வது ஆட்டம் நடைபெற்றது. இதில் வெள்ளை நிற காய்களுடன் பிரக்ஞானந்தா  47-வது காய் நகர்தலுக்கு  பின் இந்த ஆட்டமும் டிரா ஆனது. இந்த நிலையில் டை-பிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தா, உலகளவில் மூன்றாம் இடத்தில் உள்ள வீரரான ஃபேபியானோ கருணாவை எதிர்கொண்டு விளையாடினார்.  இதில், கருணாவை 3.5-2.5 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி பிரக்ஞானந்தா இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறார்.  20 ஆண்டுகளுக்கு பின் உலகக்கோப்பை செஸ் இறுதி போட்டிக்கு இந்திய வீரர் முன்னேறியுள்ளார்.

இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கும் பிரஞானந்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து பதிவில், ‘உலகக் கோப்பை செஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள்; இறுதிப்போட்டியில் கார்ல்சனை எதிர்கொள்ளவும் எனது வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

ஸ்கெட்ச் போட்ட AI..ஒரே மாதத்தில் ரூ.10 லட்சம் கடனை அடைத்த அமெரிக்க பெண்!

டெலவேர்  : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…

11 minutes ago

உங்க கொள்கைக்கும் எங்க கொள்கைக்கும் ரொம்ப தூரம்”… த.வெ.க குறித்த கேள்விக்கு சீமான் பதில்!

சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…

43 minutes ago

”புதிய கட்சி தொடங்கிய ஈலோன் மஸ்க்” – டிரம்ப் என்ன சொன்னார் தெரியுமா?

வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர்  எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…

1 hour ago

”பிரிக்ஸை ஆதரிக்கும் நாடுகளுக்கு 10 % கூடுதல் வரி” – உலக நாடுகளை எச்சரிக்கும் டிரம்ப்.!

வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…

2 hours ago

18 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தை லாவகமாக பிடித்த பெண் வன ஊழியரின் துணிச்சல்.!

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…

2 hours ago

நில மோசடி விவகாரம்: நடிகர் மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்.!

தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…

3 hours ago