MBBS பொது கலந்தாய்வுக்கு தமிழக முதல்வர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்.! அமைச்சர் மா.சுப்ரமணியன் திட்டவட்டம்.!

Published by
மணிகண்டன்

MBBS பொது கலந்தாய்வுக்கு தமிழக முதல்வர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார் என அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று சென்னையில் கூறியுள்ளார். 

MBBS எனும் இளங்கலை பொதுமருத்துவம் மற்றும் இளங்கலை பல் மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேருவதற்கு NEET மதிப்பெண் அடிப்படையில் ஆண்டுதோறும் கலந்தாய்வு நடைபெறும். அண்மையில் மத்திய அரசு அறிவித்த அறிவிபின் படி, 100 சதவீத பொது கலந்தாய்வை மத்திய தேசிய மருத்துவ முகமையின் கீழ் செயல்படும்  இளங்கலை கல்வி வாரியம் நடத்தும் என அறிவிப்பு வெளியானது.

முன்னதாக, மாநில அரசு கல்லூரிகளில் உள்ள மருத்துவ படிப்பிற்கான காலிப்பணியிடங்களில் 85 சதவீததையும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களையும், நிகர் நிலை கல்லூரிகளில் உள்ள மருத்துவ இளங்கலை மாணவர் சேர்க்கையை அந்தந்த மாநில அரசுகள் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை உறுதி செய்து வந்தனர். மீதம் உள்ள இடங்களில் (அரசு கல்லூரிகளில் உள்ள 15 சதவீத இடம் போல) மத்திய அரசு கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்தியது.

இந்நிலையில் மத்திய அரசின் 100 சதவீத பொது கலந்தாய்வு முடிவு மாநில அரசுகள் சார்பில் கடும் எதிர்ப்பை உண்டாக்கின. இதுகுறித்து ஏற்கனவே தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு ஆட்சேபனை கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.

தற்போது தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீண்டும் தனது எதிர்ப்பை பதிவு செய்து உள்ளார். இன்று  சென்னை கலைவாணர் அரங்கில் சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் கலந்துகொண்டார்.

அப்போது அமைச்சர் பேசுகையில், மத்திய அரசின் பொது கலந்தாய்வுக்கு தமிழக முதல்வர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். அப்படி பொது கலந்தாய்வு நடைபெற்றால், தமிழக முதல்வர் ஏற்கனவே அறிவித்த கிராமப்புற அரசு பள்ளி ஏழை மாணவர்களுக்கான 7.5 இடஒதுக்கீடு பாதிக்கப்படும். அதிநவீன வசதிகள் கொண்ட சென்னை மருத்துவ கல்லூரிகளில் தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு இடம் கிடைக்காமல் போகும் வாய்ப்பு உருவாகும்.

வெளி மாநிலத்திற்கு உள்ள மாணவர்கள் சென்னை கல்லூரிகளில் படிக்க நேரிடும். இது ஜனநாயகத்திற்கு புறம்பானது. தமிழக அரசு கோரிக்கை வைக்கும் போது, இந்தாண்டு பொது கலந்தாய்வு இருக்காது என சொன்னார்கள். ஆனால்,தற்போது மீண்டும் அறிவித்து உள்ளார்கள். பொது கலந்தாய்வை தமிழக முதல்வர் ஒருபோதும்  அனுமதிக்க மாட்டார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

நிக்கிதா குறித்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்.., தலைமறைவாகி ஊர் ஊராக பதுங்கல்.!

சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…

43 minutes ago

‘பரந்தூர் மக்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும்’… இல்லையெனில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் – விஜய்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

1 hour ago

முதல்வர் வேட்பாளர் விஜய்.., தவெக செயற்குழு கூட்டத்தின் முக்கியத் தீர்மானங்கள்.!

சென்னை :  2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…

2 hours ago

”திமுக, பாஜகவுடன் என்றும் கூட்டணி இல்லை” – தவெக தலைவர் விஜய் அறிவிப்பு.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

3 hours ago

என்னடா மகனே மூன்று சதத்தை மிஸ் பண்ணிட்ட…கில்லை கிண்டல் செய்த தந்தை!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…

3 hours ago

விஜய் சுற்றுப்பயணத்திற்கு முன் இன்னொரு த.வெ.க மாநில மாநாடு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

4 hours ago