chools Delayed Open [Image source : @muyanifocus]
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஜூன் 7-ஆம் தேதிக்கு பதிலாக 12-ஆம் தேதி திறப்பு என அறிவிப்பு.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையாத நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். தமிழ்நாட்டில் வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் நேற்று வெப்பம் 18 இடங்களில் 100 டிகிரி ஃபேரன்ஷூட்டை தாண்டி பதிவாகியிருந்தது. இந்த நிலையில், வெயிலின் தாக்கம் குறையாத நிலையில், முதலமைச்சருடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தி இருந்தார். எனவே, கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக உள்ள நிலையில், பள்ளி திறப்பு மீண்டும் ஒத்திவைக்கப்படுமா என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி, தமிழகத்தில் வெயிலின் தாக்கம் காரணமாக 12-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படும் எனவும் கூறப்பட்டது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஜூன் 7-ஆம் தேதிக்கு பதிலாக 12-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 12-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் இதுபோன்று ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 14-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவிருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று நடந்த முதலமைச்சருடனான ஆலோசனை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…