3 people arrested [file image]
கள்ளக்குறிச்சி : விஷச் சாராய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் ஆகியோருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் என கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தியவர்க்ளின் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது தமிழகத்தையே உலுக்கி உள்ளது . விஷச்சாராயம் அருந்தியவர்களில் 165 பேர் உள்நோயாளிகளாக, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தனர். சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்த 165 பேரில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். 118 பேர் சிகிசை பெற்று வருகின்றனர். அதில், 50-60 பேர் உடல்நலம் தேறி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை அடுத்து , மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி , மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல்துறையினர் என பலர் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டனர். இதனை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
சிபிசிஐடி அதிகாரி ஏடிஎஸ்பி கோமதி தலைமையில் குழு அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சாராய வியாபாரி கோவிந்தராஜன் என்ற கன்னுகுட்டி கைது செய்யப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து அவரது சகோதரன் தாமோதரன் மற்றும் கோவிந்தராஜன் மனைவி ரேவதி ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் ஆகியோருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வைத்து விசாரணை நடத்த கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து, அவர்கள் 3 பேரையும் போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றார்கள்.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…