கேலோ இந்திய விளையாட்டு போட்டி ஜனவரி 19-ஆம் தேதி முதல் ஜனவரி 31-ம் தேதி வரை தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 இடங்களில் நடைபெற உள்ளது. இந்த கேலோ இந்திய விளையாட்டு போட்டி தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இப்போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
3- நாள் பயணமாக நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.!
இதையடுத்து ஜனவரி 20ம் தேதி சென்னையில் இருந்து திருச்சி சென்று ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனம் செய்கிறார். பின்னர் பிரதமர் மோடி நாளை மறுநாள் ராமேஸ்வரம் செல்கிறார். அங்கு ராமநாத சுவாமி கோயில் தரிசனம் செய்கிறார். இதைத்தொடர்ந்து, அங்கிருந்து மதுரை செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார்.
இந்நிலையில், பிரதமர் வருகை ஒட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுத்துறை செயலாளர் நந்தகுமார் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்ட ஒழுங்கு ஏடிஜிபி அருண் , உயர்காவல்அதிகாரிகள் மற்றும் மத்திய அரசின் பாதுகாப்புகள் கலந்து கொண்டுள்ளனர்.
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…