Salem Sangakiri Omni Van - Lorry Accident [File Image]
சேலம் மாவட்டம் சங்ககிரியில் சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாயில் சின்ன கவுண்டனூர் பகுதி அருகே, நன்கு முனை சந்திப்பில் ஒரு சரக்கு லாரி நின்று கொண்டு இருந்துள்ளது. அப்போது அந்த வழியாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை நோக்கி வேகமாக வந்த ஆம்னி வேன் ஓன்று நின்று கொண்டிருந்த லாரி மீது வந்த வேகத்தில் பயங்கர சத்தத்துடன் மோதியது.
இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு வயது குழந்தை சஞ்சனா உட்பட செல்வராஜ், மஞ்சுளா, ஆறுமுகம், பழனிசாமி, பாப்பாத்தி, பிரியாஆகிய ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர்.
அப்போது காரில் பயணித்த இரண்டு பேர் பலத்த காயங்களுடன் இருப்பதை கண்டு, அவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீதம் உள்ள 6 பேரின் சடலங்கள் மட்டுமே மீட்க முடிந்தது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் போன்றவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…
சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…
சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…
டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…