AnbilMaheshdischarged [File Image]
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கிருஷ்ணகிரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்க, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக செல்லும்போது அவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஓய்வெடுத்து வருவதாகவும் தகவல் வெளியானது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அமைச்சர் அன்பில் மகேஷ் பெங்களூருவில் உள்ள நாராயண ஹிருதயாலயா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த நிலையில், உடல்நல குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பூரண நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். மருத்துவ பரிசோதனையில் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு மாரடைப்பு தொடர்பான எந்த வித அறிகுறிகளும் இல்லை எனவும் மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
அமைச்சர் உடல் நலன் குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், மேல் வயிற்று வலி காரணமாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வலி நிவாரணத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றபடி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நலமுடன் இருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, தற்பொழுது வயிற்று வலி காரணமாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவர் பெங்களூரில் இருந்து கார் மூலம் சாலை வழியாக சென்னை புறப்பட்டுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…