சென்னையில் உள்ள பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.இவரை அதே பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் என்ற இளைஞர் காதலித்து வந்துள்ளார்.
இதனால் தனது காதலை ஆசிரியையிடம் கூறியுள்ளார்.ஆனால் அதற்கு ஆசிரியை மறுப்பு தெரிவித்துள்ளார்.இருப்பினும் அந்த இளைஞர் அந்த பெண்ணை விடாமல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
மேலும் பள்ளிக்கு செல்லும் போதும் திரும்பி வரும்போதும் தொடர்ந்து தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.இந்நிலையில் அந்த பெண் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் வந்தபோது வெங்கட்ராமன் வழிமறித்துள்ளார்.பின்னர் அந்த பெண்ணிடம், என் காதலுக்கு பதில் சொல்லுங்க. ஏன் என் காதலை ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா? என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால் அந்த பெண் அவரின் காதலை மறுத்து அங்கிருந்து விலகி செல்ல முயன்றுள்ளார்.இதனால் ஆத்திரமிடைந்த இளைஞர் நடுரோட்டில் அந்த பெண்ணை பலமாக தாக்கியுள்ளார்.
எப்படியோ அந்த இளைஞரிடம் இருந்து அந்த பெண் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.இந்த சம்பவத்தை பார்த்த அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வெங்கட்ராமனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…