[FILE IMAGE]
ஆட்கொணர்வு மனு மீது அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், வழக்கு 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அமைச்சர் செந்தில் கைதை எதிர்த்து அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று இரண்டாவது நாளாக சென்னை உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் முன்பு நடைபெற்றது. நேற்று செந்தில் பாலாஜி தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், இன்று அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார்.
அப்போது, தங்களிடம் உள்ள ஆதாரங்களை அமலாக்கத்துறை பட்டியலிட்டு வாதாடிய சொலிசிட்டர் துஷார் மேத்தா, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்படி புலன் விசாரணை செய்வது அமலாக்கத்துறையின் கடமை. காவலில் எடுத்து விசாரிக்க சட்டத்தில் அனுமதி வழங்காவிட்டாலும், புலன் விசாரணை செய்வது கடமை. குற்றத்தை கண்டுபிடிக்க, சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்ட பணத்தை முடக்கம் செய்வது, சோதனை செய்வது, வழக்கு தாக்கல் செய்ய அதிகாரம் உள்ளது.
செந்தில் பாலாஜி ஜாமீன் கோரியதில் இருந்து, நீதிமன்ற காவலில் இருப்பதை அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். செந்தில் பாலாஜியை கைது செய்தபோது அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதாக நீதிபதி பரத சக்கரவர்த்தி கூறியிருக்கிறார். செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக இரு நீதிபதிகளும் கூறவில்லை என வாதத்தை முன்வைத்தனர்.
மேலும், குற்றவியல் நடைமுறை சட்ட பிரிவு 41ஏ குறித்து இரு நீதிபதிகளுக்கும் கருத்து வேறுபாடு இல்லை. மூத்த நீதிபதி இதுபற்றி எதுவும் கூறவில்லை, எல்லா வழக்குகளிலும் 41ஏ பொருந்தாது. காவல்துறை அதிகாரி கைது செய்யவில்லை என்றால் 41ஏ நோட்டீஸ் கொடுக்கலாம், உரிய ஆதாரங்கள் இருந்தால் சட்டவிரோத பண பரிமாற்ற சட்டப்பிரிவு 19-ன் கீழ் கைது செய்யலாம். எனவே, மருத்துவமனையில் உள்ள காலத்தை நீதிமன்ற காவலில் இருப்பதாக கருதக்கூடாது எனவும் அமலாக்கத்துறை தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டது.
இதன்பின் காவலில் விசாரிக்க அனுமதி பெற்ற நிலையில், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன்? என அமலாக்கத்துறையிடம் நீதிபதி கார்த்திகேயன் எழுப்பிய கேள்விக்கு, உடல்நிலை பாதித்த செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து ஏதேனும் நிகழ்ந்தால் நாங்கள் பொறுப்பேற்க நேரிடும், எனவே நிபந்தனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடினோம். செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமைக்கு (ஜூலை14) ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை தரப்பில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதம் நிறைவு பெற்றதை அடுத்து, விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார் 3வது நீதிபதி சிவி கார்த்திகேயன். மேலும், செந்தில் பாலாஜியின் ஆட்கொண்ர்வு மனு மீது ஜூலை 14ம் தேதி விசாரணை முடிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…