தியேட்டர் கட்டணங்களை உயர்த்த வேண்டும்..! திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை..!

Published by
செந்தில்குமார்

திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

தமிழகத்தில் இயங்கி வரும் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவதற்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

அதில் தமிழக அரசு திரையரங்குகளுக்கு கட்டண விகிதம் நிர்ணயித்து 6 ஆண்டுகள் கடந்து விட்டதாலும், நடைமுறை செலவுகள் அதிகரித்து விட்டதாலும் திரையரங்குகள் நடத்த முடியாத சூழல் உள்ளது. எனவே திரையரங்கு கட்டணங்களை உயர்த்த அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், குளிர்சாதன வசதியுடைய மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு ரூ.250 ஆகவும், குளிர்சாதன வசதியற்ற மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு ரூ.150 ஆகவும், மாநகராட்சி/பஞ்சாயத்து பகுதிகளில் குளிர்சாதன திரையரங்குகளுக்கு ரூ.200 ஆகவும், குளிர்சாதன வசதியற்ற திரையரங்குகளுக்கு ரூ.120 ஆகவும் நிர்ணயம் செய்யவேண்டும்.

ஐமேக்ஸ் திரையரங்குகளுக்கு ரூ.450 ஆகவும், எபிக் திரையரங்குகளுக்கு ரூ.400 ஆகவும், சாய்வு இருக்கை வசதி கொண்ட திரையரங்குகளுக்கு ரூ.350 ஆகவும் டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்க திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக, அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Ticket
Published by
செந்தில்குமார்

Recent Posts

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

21 seconds ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

19 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

42 minutes ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

56 minutes ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

15 hours ago