Amitshah-stalin [File Image]
பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன, வேலூர் கூட்டத்தில் அமித்ஷா பேச்சு.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று வேலூரில்நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் 9 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், உரையாற்றினார். அப்போது பேசிய அமித்ஷா, கடந்த 9 ஆண்டுகளாக ஊழலற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. 3-வது முறையாக பாஜக ஆட்சிக்கு வரவிருக்கிறது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறினார். மேலும் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவர திமுக முயற்சிக்காதது ஏன், காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருக்கும் போது எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்திருக்கலாம் என கேள்விஎழுப்பியுள்ளார்.
கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மட்டும் பல்வேறு திட்டங்களுக்காக 2 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ திட்டங்களுக்கு 72,000 கோடி நிதி ஒதுக்கீடு மற்றும், தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக பிரதமர் மோடி காசி தமிழ்ச்சங்கத்தில் 23 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
நீட், சிஏபிஎப் உள்ளிட்ட தேர்வுகளை தமிழிலும் எழுத அனுமதி, 50,000 கோடி செலவில் சென்னை-சேலம் விரைவு சாலைக்கு திட்டம் வகுக்கப்பட்டு பல்வேறு திட்டங்களை பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு செய்திருக்கிறோம் என அமித்ஷா, முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் அளிக்கும் விதமாக தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின், நேற்று சேலம் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு பாஜக செய்த திட்டங்கள் குறித்து கேள்வியெழுப்பியிருந்தார்.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…