bungee jump man [Image source : file image ]
விவாகரத்தை கொண்டாடுவதற்காக பங்கி ஜம்ப் சென்ற ஒருவரின் கயிறு அறுந்து 70 அடி கீழே விழுந்ததில் படு காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரேசிலின் காம்போ மாக்ரோவில் உள்ள லகோவா அசுலுக்கு தன்னுடைய விவகாரத்தை கொண்டாடுவதற்காக ரஃபேல் டோஸ் சாண்டோஸ் டோஸ் எனும் 22 வயது இளைஞர் பங்கி ஜம்ப்-பில் பங்கேற்கச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக கயிறு அறுந்து விழுந்ததில் 70 அடி ஆழத்தில் விழுந்தார்.
இதில் அவரது கழுத்து மற்றும் இடுப்பு முதுகெலும்பு முறிந்து மருத்துவமனையில் தீவிர சிக்கிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய ரஃபேல் “நான் எப்போதும் மிகவும் அமைதியான நபராக இருந்தேன், ஆனால் சமீபகாலமாக நிலைமை மாறிவிட்டது. விவாகரத்துக்குப் பிறகு, நான் எல்லா வகையிலும் வாழ்க்கையை அனுபவிக்க விரும்பினேன்.
நான் நிறைய பைத்தியக்காரத்தனமான விஷயங்களைச் செய்து கொண்டிருந்தேன். நான் என் உயிரை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அன்று, நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருந்தேன். நான் பங்கி ஜம்ப் செய்யும் பொது கயிறு எனது எடையைத் தாங்க முடியாமல் அறுந்தது. இதனால் நான் மிகவும் பீதியடைந்தேன், கீழே விழுது எழுந்து நிற்க முயற்சித்தபோது, நான் மிகவும் வலுவான வலியை உணர்ந்தேன்.
என் வாழ்க்கையில் இதைவிட மோசமான வலியை நான் உணர்ந்ததில்லை” என கூறி உள்ளார். மேலும், அவர் பங்கி ஜம்ப் செய்யும் போது கீழே தவறி விழுந்த வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…
லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…