Categories: உலகம்

ஒரே பாலின திருமணத்தை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்த முதல் தெற்காசிய நாடு நேபாளம்!

Published by
பாலா கலியமூர்த்தி

ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 5 மாதங்களுக்கு பிறகு, நேபாளம் அதிகாரப்பூர்வமாக ஒரே பாலின திருமணத்தின் முதல் பதிவை செய்துள்ளது. இதனால், ஒரே பாலின திருமணத்தை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்த முதல் தெற்காசிய நாடு நேபாளம் ஆகும்.

நேபாளத்தில் தன் பாலினத் திருமணங்களுக்கு அந்த நாட்டு உச்சநீதிமன்றம் கடந்த 2007-ம் அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து 2015ம் ஆண்டில் இயற்றப்பட்ட புதிய அரசமைப்பு சட்டத்திலும் பாலினத் தேர்வின் அடிப்படையில் மக்களிடையே பாகுபாடு காட்டக்கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் நேபாளத்தில் மாயா குருங் (வயது 35) என்ற திருநங்கைக்கும், சுரேந்திர பாண்டே (வயது 27) என்ற சமபாலின சேர்க்கையாளருக்கும் இடையே சட்டபூர்வமாக நடைபெற்ற திருமணத்தை பதிவு செய்ய அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

கணவன் – மனைவி சண்டை.! டெல்லியில் தரையிறங்கிய பாங்காங் விமானம்.!

இதுதொடர்பான மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஜூன் 27 அன்று தன் பாலினத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. ஆனால், ஓரினச்சேர்க்கை திருமணத்தை தற்காலிகமாக பதிவு செய்வதற்கான வரலாற்று உத்தரவு இருந்தபோதிலும், காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் நான்கு மாதங்களுக்கு முன்பு தேவையான சட்டங்கள் இல்லாததைக் காரணம் காட்டி இந்த நடவடிக்கையை நிராகரித்தது. அந்த சமயத்தில் சுரேந்திர பாண்டே மற்றும் மாயாவின் திருமண விண்ணப்ப பதிவு நிராகரிக்கப்பட்டது.

இதன்பின், உச்சநீதிமன்றம் தன் பாலினத் திருமணங்கள் பதிவு செய்ய சட்ட அங்கீகாரம் அளித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு வந்து 5 மாதங்கள் ஆன நிலையில், மாயா குருங் என்ற திருநங்கைக்கும், சுரேந்திர பாண்டே என்ற சமபாலின சேர்க்கையாளருக்கும் இடையே சட்டப்பூர்வமாக நடந்த திருமணம் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது.  இதனால் ஒரே பாலின திருமணத்தை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்த முதல் தெற்காசிய நாடு நேபாளம் ஆகும்.

இதுதொடர்பாக ப்ளூ டயமண்ட் சொசைட்டியின் தலைவர் சஞ்சிப் குருங் (பிங்கி) கூறியதாவது, மாயா குருங், சுரேந்திர பாண்டே ஆகியோரது திருமணம் மேற்கு நேபாளத்தில் உள்ள லாம்ஜங் மாவட்டத்தின் டோர்டி கிராமப்புற நகராட்சியில் பதிவு செய்யப்பட்டது.  நேபாளத்தில் பாலியல் சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் நலனுக்காக பாடுபடுகிறோம். நேபாளத்தின் மூன்றாம் பாலின சமூகமான எங்களுக்கு இது ஒரு பெரிய சாதனையாகும். இதை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் : வரிசையில் நின்று வாக்களித்த ராஜமௌலி, அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி.!

தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக, சம பாலினத் திருமணங்களை அதிகாரபூா்வமாகப் பதிவு செய்யும் நடைமுறை நேற்று நேபாளத்தில் தொடங்கப்பட்டது. நாங்கள் இந்த முடிவை வரவேற்கிறோம். குடும்பத்தினரின் ஒப்புதலுடன் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட நவல்பரசி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்திராவும், லாம்ஜங் மாவட்டத்தைச் சேர்ந்த மாயாவும் கடந்த 6 ஆண்டுகளாக கணவன்-மனைவியாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

பல மூன்றாம் பாலின தம்பதிகள் தங்கள் அடையாளங்கள் மற்றும் உரிமைகள் இல்லாமல் வாழ்கின்றனர். இது அவர்களுக்கு நிறைய உதவப் போகிறது. இந்த சமூகத்தின் மற்ற மக்களுக்கு அவர்களின் திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கான கதவு இப்போது திறக்கப்பட்டுள்ளது. இப்போது அவர்களின் திருமணம் தற்காலிகமாக பதிவு செய்யப்பட்டு, தேவையான சட்டங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, அது தானாகவே நிரந்தர அங்கீகாரத்தைப் பெறும் எனவும் தெரிவித்தார்.

Recent Posts

“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!

சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…

12 minutes ago

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…

48 minutes ago

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

3 hours ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

3 hours ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

4 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

5 hours ago