இங்கிலாந்து நாட்டில் ஒருவர் அவரது காரில் சிகெரெட் பிடிக்க லைட்டரை பற்ற வைத்த போது, கார் சட்டென்று தீப்பிடித்து வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் இருந்த ஒருவர், ஏதோ பெரிய வெடிகுண்டு வெடித்தது போன்றே காதை கிழிக்கும் அளவிற்கு சத்தம் கேட்டதாக குறிப்பிட்டார். இங்கிலாந்து நாட்டில் மேற்கு யார்க்ஷயரின் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் அமர்ந்து இருந்த நபர் ஒருவர், காரை வாசனை மயமாக்கும் ஏர் ஃப்ரெஷ்னரை ஸ்பிரே செய்துள்ளார். பின்பு வழக்கமாக ஸ்பிரே […]
ஆஸ்ரேலியாவில் இருக்கும் ஒருவர் அடுப்பின்றி தனது காரில் பன்றி இறைச்சியை ஒருவர் சமைத்த ருசிகர சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. நகைச்சுவையுடன் இந்த பதிவை பலரும் பகிர்ந்தும், வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளுமாறு அறிவுரை கூறியும் வருகிறார்கள். ஆஸ்ரேலியாவில் உள்ள பெர்த் (Perth) நகரத்தில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிப்பதால் ஸ்டு பெங்கெல்லி (Stu Pengelly) என்பவர் பகலில் அவரது காரின் இருக்கையில் சமைக்காத பன்றிக் கறி வைத்ததாகவும், அதை 10 மணி நேரத்துக்கு பின் சென்று பார்த்தப் […]
இத்தாலியில் உள்ள பிரிண்டிசி (Brindisi) நகரில் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் பாதுகாப்பு கருதி அங்கிருந்து 50,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். இத்தாலியின் பிரிண்டிசி(Brindisi) நகரில் உள்ள திரையரங்கத்தை சீரமைக்கும் பணி சமீபத்தில் நடைபெற்றது. அப்போது சக்திவாய்ந்த வெடிகுண்டு தென்பட்டது. இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் 1941-ம் ஆண்டு அந்த வெடிகுண்டை பிரிட்டிஷ் படையினர் வீசியிருக்கலாம் என கருதப்படுகிறது. செயலிழக்கப்படாத அந்த வெடிகுண்டு ஒரு மீட்டர் நீளமும், 40 கிலோ டைனமைட் வெடிபொருட்களுடனும் இருந்தது. […]
இயற்கையின் அழகை ரசிப்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் அழகிய கடற்கரைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை காண்பது பலருக்கும் பிடிக்கும். பிரிட்டனில் கடலுக்குள் சென்ற நீர் மூழ்கி வீரரை கடல்நாய் ஒன்று கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இயற்கையின் அழகை ரசிப்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் அழகிய கடற்கரைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை பார்ப்பது பலருக்கும் பிடித்தமான செயல்என சொல்லலாம். ஏனென்றால் கடலுக்குள் நாம் பார்த்திராத அரிய வகை உயிரினங்களும் நம் […]
தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்புக்கு தூக்கு தண்டனை விதித்தது பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம். பாகிஸ்தானின் அதிபராக கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2008-ம் வரை இருந்தார். முஷரப் பாகிஸ்தானின் அதிபராக கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2008-ம் வரை இருந்தார். அப்போது 2007-ம் ஆண்டு நாட்டில் அவசர நிலையை கொண்டு வந்தார்.இதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது. இது தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டில் முஷரப் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது. முஷரப் மீதான […]
சிட்னியில் இருந்து குவாண்டாஸ் “ஏர்பஸ் ஏ330” ரக விமானம் 271 பயணிகளை ஏற்றி கொண்டு பெர்த் நகருக்கு புறப்பட்டு சென்றது. புறப்பட்ட அடுத்த 20 நிமிடத்தில் விமானிகளின் அறைக்குள் இருந்து திடீரென புகை வெளியானது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் இருந்து பெர்த் நகருக்கு குவாண்டாஸ் விமான நிறுவனத்திற்க்கு சொந்தமான “ஏர்பஸ் ஏ330” ரக விமானம் 271 பயணிகளை ஏற்றி கொண்டு பெர்த் நகருக்கு புறப்பட்டு சென்றது. அப்போது விமானம் புறப்பட்ட அடுத்த 20 நிமிடத்தில் விமானிகளின் […]
ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது பிறந்தநாளை கொண்டாட தனது குடும்பத்துடன் ஒயிட் தீவுக்கு சுற்றுலா சென்று உள்ளார். அப்போது எரிமலை வெடிப்பில் சிக்கி அந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். கடந்த திங்கட்கிழமை நியூசிலாந்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஒயிட் தீவில் எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டது. இதில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 47 பேர் சிக்கினர். பின்னர் மீட்பு பணிகள் தீவிரடைந்தது. எரிமலை வெடிப்பில் சிக்கி […]
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் டிவிட்டரில் மிகவும் சுறுசுறுப்பாக செல்லப்படுபவர். இவர் 2 மணிநேரத்தில் சுமார் 123 ட்வீட்கள் போட்டு சாதனை படைத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் டிவிட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். தனது கருத்துக்களை டிவிட்டரிலோ, பொது வெளியிலோ பதிவிட்டு அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிவிடுகிறார். இவர் தற்போது டிவிட்டரில் ஒரு சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார் அதாவது, 2 மணிநேரத்தில் 123 டிவீட்களை பதிவிட்டுள்ளார். ஒரு நாட்டின் தலைவர் 2 மணிநேரத்தில் இவ்வளவு ட்வீட் பதிவிட்டிருப்பது […]
மயில் போன்ற தோகை கொண்ட அரிய வகை பறவைகள் சீனாவை சுற்றி வருகிறது. சீனர்களால் நெருப்பு பீனிக்ஸ் என்றும், சீன பீசன்ட் பறவை என்றும் இந்த பறவைகளை அழைக்கப்படுகின்றன. சீனாவின் ஹெனான் மாகாணத்தில் மயில் போன்ற தோகை கொண்ட அரிய வகை பொன்னிற பீசன்ட் (pheasant) பறவைகள் சுற்றித் திரியும் காட்சிகள் வெளியாகியுள்ளது. நெருப்பு பீனிக்ஸ் என்றும், சீன பீசன்ட் பறவை என்றும் இந்த பறவைகளை அழைக்கப்படுகின்றன. இந்த வகையான பறவைகள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருப்பதால், […]
அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் பனிபொழிவில் ஒரு இளைஞர் சிக்கி ஆற்றில் தனது காருடன் விழுந்துவிட்டார். தனது ஐபோன் உதவியுடன் அவசர அழைப்பை மேற்கொண்டு மீட்பு படையினர் மூலம் அந்த இளைஞர் உயிருடன் மீட்கப்பட்டார். தற்போது குளிர்காலம் என்பதால் பல நாடுகளில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதனால் பல இடங்களில் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் லோவா நகரில் கடும் பனிப்பொழிவு பெய்து வருகிறது. அந்த பனிபொழிவில் ஒரு 20 […]
நெருப்பு பிழம்பாக காட்சியளிக்கும் ப்ளூ மவுண்டைன்ஸ் பகுதி. இந்தத் தீயில் இதுவரை 10 லட்சம் ஹெக்டேர் பரப்பில் மரங்கள், செடி கொடி, மற்றும் 400க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பல். ஆஸ்திரேலியாவின் ப்ளூ மவுண்டைன்ஸ் பகுதியில் பல அடி உயரமுள்ள மரங்கள் தீப்பிடித்து எரிந்து வருவதால் அப்பகுதியே நெருப்பு பிழம்பாக காட்சியளிக்கிறது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட புதர் தீ படிப்படியாக அருகில் இருக்கும் பகுதிக்கும் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தத் தீயில் […]
பாகிஸ்தானில் மத சுதந்திரம் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. இம்ரான் கான் ஆட்சியில் தொடர்ந்து மோசமடைந்து வருவதாக ஐநா குற்றம் சாட்டி உள்ளது. பாகிஸ்தானில் மத சுதந்திரம் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது என்கின்ற தலைப்பில் 47 பக்கங்களை கொண்ட ஒரு அறிக்கையை ஐ.நா தயாரித்துள்ளது.அதில் கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்களின் நிலை மிகவும் மோசமாகி உள்ளது. குறிப்பாக அந்த மதங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகளின் நிலை அதளபாதாளத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில் ஆண்டுத்தோறும் நூற்றுக்கணக்கான இளம்பெண்களும், […]
69-வது ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை ஜமைக்காவை சேர்ந்த இளம்பெண் டோனி-ஆன் சிங் வென்றுள்ளார். பிரான்ஸ் அழகி ஓப்லி மெஸினோ இரண்டாவது இடத்தையும், இந்திய அழகி சுமன் ராவ் மூன்றாவது இடத்தையும் கைப்பற்றினர். 69-வது உலக அழகி போட்டி லண்டனின் கிழக்கு பகுதியில் உள்ள எக்செல் மையத்தில் கடந்த நவம்பர் 20-ம் தேதி துவங்கியது. இதில் 111 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். பல்வேறு போட்டிகளுக்கு பின் 40 பேரை தேர்வு செய்யப்பட்டது. பின்னர் உலக அழகி […]
ரியோ டி ஜெனிரோவில் உள்ள தென் அமெரிக்காவின் மிகப்பெரிய மீன் கண்காட்சி அனைவராலும் கவரப்பட்டது. சுறாக்களுக்கு இடையே சாண்டா கிளாஸ் உடையணிந்து நீந்தி உணவளித்தது ஆச்சரியதை உண்டாக்கியது. பிரேசில் நாட்டில் மீன் கண்காட்சியக ஊழியர் ஒருவர் சாண்டா கிளாஸ் போல் உடையணிந்து சுறாக்களுக்கு இடையில் நீந்தி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார். ரியோ டி ஜெனிரோவில் உள்ள தென் அமெரிக்காவின் மிகப்பெரிய மீன் கண்காட்சியகத்தில் அதன் ஊழியர் வால்மர் டி அகுயார் சால்வடோர் (Volmer de Aguiar Salvador), சாண்டா […]
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவானது இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு தற்போது சட்டமாக்கப்பட்டுவிட்டது. இச்சட்டம் அடிப்படையில் பாரபட்சமானது என ஐநா மனித உரிமைகள் ஆணையம் டிவிட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் குடியேறி வாழ்ந்து வரும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களில் முஸ்லீம் அல்லாத மற்ற மதத்தினருக்கு விரைவில் குடியுரிமை வழங்கும் புதிய குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசானது இரு அவைகளிலும் நிறைவேற்றியது. பின்னர் அச்சட்டம் குடியரசு தலைவர் ஒப்புதலோடு சட்டமாக்கப்பட்டுவிட்டது. இந்த புதிய குடியுரிமை சட்டத்திருத்தம் […]
சீனாவில் ஒரே நேரத்தில் 3 சூரியன்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள். சூரிய ஒளி ஈரப்பகுதியை ஊடுருவிச் செல்லும்போது இதுபோன்ற நிகழ்வு ஏற்படும். ஒரே நேரத்தில் 3 சூரியன்கள் தெரிந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவில் உள்ள மேற்குப் பகுதியின் ஸின்ஜியாங் மாகாணத்தில் உள்ள கோர்காஸ் நகரத்தில் வியாழக்கிழமை இந்த அதிசய நிகழ்வு நடந்தது. முதலில் இரண்டு சூரியன்கள் தெரிந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்ட மக்கள் அடுத்த சில மணி நேரத்தில் 3-வது சூரியனும் வானில் உதயமானதால் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், […]
பிரிட்டன் தேர்தலில் முந்தையை விட அதிக மெஜாரிட்டியில் பிரதமர் ஆகிறார் போரிஸ் ஜான்சன். பிரிட்டன் பொது தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 15 எம்.பி.க்கள் வெற்றி பெற்றுள்ளனர். பிரிட்டன் தேர்தலில் முந்தையை விட அதிக மெஜாரிட்டியில் பிரதமர் ஆகிறார் போரிஸ் ஜான்சன். இந்திய வம்சாவளியை சேர்ந்த வெற்றியாளர்கள், கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிலாளர் கட்சி சார்பில் 7 பேரும், லிபரெல் ஜனநாயக கட்சி சார்பில் ஒருவரும் வெற்றி பெற்றனர். ஆனால், தொழிலாளர் கட்சி சார்பில், வெற்றி பெற்ற இந்திய […]
கிரேட்டா கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் என டிவிட் செய்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப். உலகம் முழுவதும் கவனம் ஈர்த்த கிரேட்டாவுக்கு டைம் பத்திரிகை கவுரவம் அளித்துள்ளது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கிரேட்டா தன்பர்க் என்பருக்கு 16 வயது இளம்பெண் ஆவார். இவர் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வந்தார். பின்பு இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஸ்வீடன் நாட்டின் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு போராட்டம் நடத்தினார். இதன் மூலம் அவர் உலக நாடுகளில் மிகவும் பிரபலமானார். […]
இங்கிலாந்தில் தேர்தல் நடைபெற்ற 650 தொகுதிகளின் ரிசல்ட் தற்போது வெளியாகி கொண்டிருக்கிறது. அதில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி முன்னேறி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் தற்போது தேர்தல் நிறைவு பெற்றுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளன. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி ( பழமைவாத கட்சி ) சார்பாக போரிஸ் ஜான்சனும், இவருக்கு எதிராக தொழிலாளர் கட்சி சார்பாக ஜெரோமி கார்பைனும் போட்டியிட்டனர். தேர்தல் முடிவடைந்த நிலையில் […]
பனி உறைந்த குளத்தில் சிக்கித் தவித்த மான் பத்திரமாக மீட்பு. கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில் சப்லேட்டே நகரில் உள்ள குளத்தில் நீர் உறைந்து காணப்பட்டது. அமெரிக்காவின் வயோமிங்கிங் மாகாணத்தில் பனி உறைந்த குளத்தில் தவறி விழுந்த மான் ஒன்று பத்திரமாக மீட்டகப்பட்டது. இந்நிலையில், அந்நாட்டில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் சப்லேட்டே நகரில் உள்ள குளத்தில் நீர் உறைந்து இருக்கும் நிலையில், அதில் சறுக்கி விழுந்த மான் ஒன்று எழுந்து நிற்க முடியாமல் போராடியது […]