Maxico Acc [Image source : Daily Sun]
மெக்சிகோவில் பயணிகள் வேனும் சரக்கு லாரியும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோவின் வடக்குப் பகுதியில் பயணிகள் வேனும் சரக்கு லாரியும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த மோதலினால் பாதிப்படைந்த வேன் மற்றும் சரக்கு டிரெய்லர் தீப்பிடித்து எறிந்துள்ளது.
இதனால் 26 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மாநிலத் தலைநகர் சியுடாட் விக்டோரியாவுக்கு அருகிலுள்ள நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்துக்குறித்து தகவல் அறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
ஆனால், விபத்திற்கு காரணமான லாரியில் டிரெய்லர் மட்டுமே அங்கு இருந்ததால் சரக்கு லாரி ஓட்டுநர் அதனை கழட்டி விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், பாதிக்கப்பட்டவர்களில் பலர், வெளியூர் சென்று திரும்பிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிற நிலையில் அதிகாரிகள் அதனை உறுதிப்படுத்தவில்லை. இந்த விபத்து குறித்த காரணம் தெரியாதததால் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…