கடந்த 2015-ம் ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளுக்கு இடையில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது, ஈரான் தங்களது அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை இல்லை என கூறியதால் அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட ஐ.நா. பொருளாதார தடைகள் அனைத்தும் நீக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளை மீறினால் ஐ.நா. தடை அமல்படுத்த ஒப்பந்தத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கு உரிமை உண்டு என கூறப்பட்டது. இதற்கு “மீள் தடை” என கூறுவார்கள்.
இந்நிலையில், ஒபாமா இருந்தபோது கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தில் பல குறைகள் கூறியும், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி, அதிகப்படியான அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டியும் டிரம்ப் கடந்த 2018-ம் ஆண்டு இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார்.
மேலும், ஈரான் மீது ஐ.நா. பொருளாதார தடைகளை விதித்தார். ஆனால், அந்த தடை காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைய உள்ளதால் மீண்டும் ஐ.நா. பொருளாதாரத் தடைகளை அமல்படுத்த அமெரிக்கா தீவிரம் காட்டி வந்த நிலையில், ஈரான் மீதான ஐ.நா. பொருளாதார தடைகள் அனைத்தும் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ அறிவித்தார்.
அணுசக்தி ஒப்பந்தத்தின் மீள் தடை அம்சத்தை பயன்படுத்தி ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகள் விதிக்க முடியாது என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மற்ற நாடுகள் கூறுகிறார்கள். ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 2018 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகியதும், ஈரான் மீதான அமெரிக்கத் தடைகளை மீண்டும் நடைமுறை செய்வதற்கான சட்டபூர்வமான நிலையை இழந்தது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், இந்த ஒப்பந்தத்தில் அசல் பங்கேற்பாளராகவும், சபை உறுப்பினராகவும் அதைச் செய்வதற்கான உரிமையை தக்க வைத்துக் கொண்டிருப்பதாக அமெரிக்கா கூறி வருகிறது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…