திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பள்ளி மாணவன் சின்னத்துரை மற்றும் அவனது தங்கை இருவரும் சக மாணவர்களால் மிகக் கொடூரமான முறையில் வெட்டப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சின்னத்துரை மற்றும் அவரது தங்கையை விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நேரில்சென்று பார்த்து நலம் விசாரித்தார்.
இந்த நிலையில், இந்த கொலைவெறி தாக்குதலை கண்டித்து திருநெல்வேலியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தென் மாவட்டங்களில் நிகழும் சாதி ரீதியான பிரச்சினைகளை தடுக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றுள்ளனர்.
இந்த போராட்டத்தில், பள்ளி கல்லூரி மாணவர்களே, ஜாதிய மதவாத வெறுப்பு அரசியலை விதைக்கும் போக்கினை வன்மையாக கண்டிக்கிறோம் என முழக்கமிட்டனர். இதனையடுத்து அந்த பகுதியில் அசம்பாவிதங்களை தவிர்க்க பாளையங்கோட்டை உதவி ஆணையர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…