அரசியல்

Senthil Balaji : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் – கோர்ட் இன்று தீர்ப்பு..!

Published by
லீனா

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரின் பெயரில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். செந்தில் பாலாஜி உடல்நிலை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுதாரர் அமைச்சர் பொறுப்பில் இருப்பதால் எம்எல்ஏ, எம்பிக்கள் மனுக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றதிற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.  சிறப்பு நீதிமன்றம் இந்த ஜாமீன் வழக்கை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கும் என விசாரிக்க மறுத்த நிலையில், செந்தில் பாலாஜி மீதான ஜாமீன் மனுவை யார் விசாரிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டு , அந்த வழக்கில், ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்கும் என கூறியது.

முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கான ஜாமீன் கேட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அல்லி முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி உடல் நலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் கோரப்பட்டது. அதே வேளையில் விசாரணைக்கு கூடுதல் அவகாசம் கேட்டு அமலாக்கத்துறையும் வாதிட்டது.

இந்த வழக்கு விசாரணை தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யுமாறு அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை  வெள்ளிக்கிழமை (செப்.15) ஒத்திவைத்து இருந்தது.  இதனை தொடர்ந்து,  இரு தரப்பு வாதங்களும் முழுமையாக நிறைவு பெற்ற பின்னர், வழக்கின் தீர்ப்பானது வரும் 20ஆம் தேதி அறிவிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

Published by
லீனா

Recent Posts

ஹிட் மேன் ஹாப்பி அன்னாச்சி…, வான்கடேவில் ரோஹித் சர்மா பெயரில் ஸ்டாண்ட்..!

மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…

9 hours ago

மாமனாக வென்றாரா நடிகர் சூரி.? ட்விட்டர் விமர்சனம் இதோ.!

சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…

9 hours ago

”மாமன்” திரைப்படம் ரிலீஸ்: மண் சோறு சாப்பிட்ட மதுரை ரசிகர்கள் குறித்து சூரி வேதனை.!

சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…

11 hours ago

போர் பதற்றமா இருக்கு நான் வரல…ஐபிஎல் தொடருக்கு டாட்டா காட்டிய மிட்செல் ஸ்டார்க்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…

11 hours ago

இன்று 9, நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

13 hours ago

ஐபிஎல் போட்டி நாளை தொடக்கம்.! பெங்களூரு மழை ஆட்டத்தை கெடுக்குமா?

பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…

13 hours ago