அரசியல்

தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் – முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை

Published by
லீனா

கடந்த 11-ஆம் தேதி  டெல்லியில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில், தமிழகத்திற்கான காவிரி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய 38 டிஎம்சி நீரை உடனே திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆனால், தமிழ்நாடு அரசின் கோரிக்கை ஏற்கப்படாததால் கூட்டத்தில் இருந்து தமிழக அரசின் அதிகாரிகள் குழு வெளிநடப்பு செய்தது. அதன்பின், காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த நிலையில், கர்நாடக அரசு காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்து விட்டாலும், மிக குறைவான அளவிலேயே திறந்து விடுவதாக கூறப்பட்டது. மேலும் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் காவிரி நீரை திறந்துவிடக்கூடாது என கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை கடிதம் எழுதியிருந்தார்.

இதனை தொடர்ந்து பசவராஜ் பொம்மை தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடுவதை உடனே நிறுத்த வேண்டும். காவிரி நீர் திறப்பதை உடனடியாக நிறுத்தி, கர்நாடகாவின் உண்மை முகத்தை தெரிவிக்க வேண்டும். கர்நாடக மாநில விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்றும், காவிரி நீர் மேலாண்மையில் கர்நாடகாவில் ஒருமித்த கருத்து இல்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…

15 minutes ago

நிக்கிதா குறித்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்.., தலைமறைவாகி ஊர் ஊராக பதுங்கல்.!

சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…

1 hour ago

‘பரந்தூர் மக்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும்’… இல்லையெனில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் – விஜய்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

2 hours ago

முதல்வர் வேட்பாளர் விஜய்.., தவெக செயற்குழு கூட்டத்தின் முக்கியத் தீர்மானங்கள்.!

சென்னை :  2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…

2 hours ago

”திமுக, பாஜகவுடன் என்றும் கூட்டணி இல்லை” – தவெக தலைவர் விஜய் அறிவிப்பு.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

3 hours ago

என்னடா மகனே மூன்று சதத்தை மிஸ் பண்ணிட்ட…கில்லை கிண்டல் செய்த தந்தை!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…

3 hours ago