su.venkadesanmp [Imagesource : The new indian express]
விதவை சான்றிதழ் ஒரு வார காலத்திற்குள் தரப்பட வேண்டுமென தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.
மக்கள் சந்திப்பு இயக்கத்தில், சு.வெங்கடேசன் எம்.பி அவர்களிடம் விதவை சான்றிதழுக்கு விண்ணப்பித்து 6 மாதமாகிவிட்டது. அலையாய் அலைகிறேன். கிடைக்கவில்லை என்று கலங்கிய கண்களுடன் வந்துள்ளார்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘முதல்வர் உத்தரவு பிறப்பிக்க வேண்டுகிறேன். மக்கள் சந்திப்பு இயக்கத்தில் ஒரு வயது கைக்குழந்தையோடு வந்த பெண் கலங்கிய கண்களோடு சொன்னார். “விதவை சான்றிதழுக்கு விண்ணப்பித்து 6 மாதமாகிவிட்டது. அலையாய் அலைகிறேன். கிடைக்கவில்லை” என்று. அதிகாரிகள் ஏதேதோ காரணம் சொன்னார்கள்.
அந்த பெண்ணுக்கு சான்றிதழ் கொடுக்காமல் முகாமை முடிக்கமாட்டேன் என்று கூறிவிட்டேன். இரவு 7 மணிக்கு சான்றிதழை கொடுத்து முகாமை முடித்தோம். விதவை சான்றிதழ் ஒரு வார காலத்திற்குள் தரப்பட வேண்டுமென தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்து இதுபோன்ற கொடுமைகளுக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…