[file image]
சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 23ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அனைத்து போட்டிகளும் ஹாங்சோவில் உள்ள 56 அரங்குகள் மற்றும் மைதானங்களில் நடந்து வருகிறது. சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உள்பட 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். அந்தவகையில், ஆசிய போட்டியில் பங்கேற்க இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 699 வீரர், வீராங்கனைகளை 39 விளையாட்டுகளில் பங்கேற்று விளையாடி வருகிறது.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் 40 வகையான விளையாட்டுகள் 61 பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 19-வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வரும் நிலையில், 7-வது நாளான இன்று ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தற்போதுவரை 8 தங்கம், 12 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 32 பதக்கங்களைப் பெற்று, பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.
2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தனது முத்திரையைப் பதித்து, குறிப்பிட்ட விளையாட்டுகளில் சிறந்து விளங்கி நாட்டிற்கு இதுவரை மொத்தம் 32 பதக்கங்களை வென்று விளையாடி, தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. இருப்பினும், சீனா 95 தங்கம், 55 வெள்ளி, 27 வெண்கலம் என இதுவரை மொத்தம் 177 பதக்கங்களை வென்று முதலிடத்தில் உள்ளது. இதுபோன்று, கொரியா 24 தங்கம், 24 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 89 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேபோல், ஜப்பான் 20 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் பெற்று பதக்க பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதையடுத்து இந்தியா உள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023: இந்திய தங்கப் பதக்கம் வென்றவர்களின் பட்டியல்:
இதனிடையே, கடந்த முறை நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 16 தங்கம் உட்பட 70 பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 8-வது இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடப்படுகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…