Ashwin 700 wkts [Image-twitter/@mufaddal_vohra]
அஷ்வின், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக தந்தை-மகன் என இருவரின் விக்கெட்களையும் வீழ்த்திய முதல் இந்திய பவுலரானார்.
வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று டாமினிகா மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் விக்கெட்டாக டேக்னரின் சந்தர்பால்(12 ரன்கள்) விக்கெட்டை இந்திய வீரர் அஷ்வின் எடுத்த போது, டெஸ்ட் போட்டிகளில் தந்தை-மகன் என இருவரின் விக்கெட்களையும் வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னதாக 2011 டெஸ்ட் தொடரின் போது ஷிவ்னரின் சந்தர்பால் விக்கெட்டை அஷ்வின், எடுத்திருந்தார்.
நேற்று முதல் நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி, அஷ்வினின்(5 விக்கெட்கள்) சிறப்பான பந்துவீச்சால் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மேலும் இந்த போட்டியில் அஷ்வின் எடுத்த விக்கெட்கள் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்களையும் கடந்துள்ளார். கும்ப்ளே 953 விக்கெட்களும், ஹர்பஜன் 707 விக்கெட்களும், தற்போது அஷ்வின் இந்த லிஸ்டில் 3-வது இடத்தில் இருக்கிறார்.
இதையடுத்து இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது, களத்தில் ஜெய்ஸ்வால் 40* மற்றும் ரோஹித் 30* ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…