HPCA PBKS VS DC [Image source : file image ]
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் 10 ஆண்டுகள் பிறகு தரம்ஷாலாவில் இன்று நடைபெறவுள்ளது.
தர்மஷாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம் (HPCA) மைதானத்தில் ஐபிஎல் போட்டி (மே 17) இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. பஞ்சாப் கிங்ஸ் இந்த சீசனின் 6-வது வெற்றியைப் பதிவுசெய்து பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய வேண்டும் நம்பிக்கையுடன் இந்த ஆட்டத்தில் களமிறங்குகிறது.
அதே நேரத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் இதுவரை 8-போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில், இந்த சீசனில் கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது என்றே கூறலாம். இன்றைய போட்டியில் டெல்லி வெற்றிபெற்றால் பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கேள்வி குறி ஆகிவிடும்.
மேலும், இந்த இரண்டு அணிகளும் கடைசியாக சந்தித்தபோது, ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. மேலும், இந்த மைதானம் பஞ்சாப் அணி வீரர்களுக்கு பிடித்த மைதானம் என்பதால் பஞ்சாப் அணி அதிரடியாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மைதானத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு பூஜ்ஜியத்தில் உள்ளது என்பதால் போட்டி தடையின்றி நடைபெறும் என எதிர்பார்க்கலாம். மேலும், 10 ஆண்டுகளுக்கு பிறகு தரம்ஷாலாவில் ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…