IPL ClosingCeremony [FileImage]
ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப்போட்டியில் நடைபெறும் நிறைவு விழாவில் ராப்பர் கிங், டிஜே நியூக்லியா, டிவைன் மற்றும் ஜோனிதா காந்தி கலந்து கொள்கிறார்கள்…
இந்தியன் பிரீமியர் லீக் 2023 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் நடப்பு ஐபிஎல் தொடர் முடிவடையவிருக்கிறது. பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி வரும் மே 28 ஆம் தேதி குஜராத் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
குவாலிஃபையர் 1ல் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது, ஆனால் நடப்பு சாம்பியனான குஜராத் அணிக்கு மற்றொரு வாய்ப்பான இன்று குவாலிஃபையர் 2ல் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வரலாற்றில் இரண்டு அணிகள் மட்டுமே தொடர்ச்சியாக இரண்டு முறை பட்டத்தை வென்றுள்ளன. அந்த அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மற்றொரு அணியான மும்பை இந்தியன்ஸ், இன்று குவாலிஃபையர் 2ல் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது.
இந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நிறைவு விழா, தொடக்க விழா போன்றே பிரமாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதில் உலக பிரபல நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர். இதனை ஐபிஎல் நிர்வாகம் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை ஐபிஎல் 2023 நிறைவு விழாவில் பிரபல ராப்பர் கிங் மற்றும் டிஜே நியூக்லியா ஆகியோரும், பாடகர்கள் டிவைன் மற்றும் ஜோனிதா காந்தி ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர்.
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…