MSdhoni RetirementIPL [Image - Twitter/@IPL]
வெற்றிக்கு பிறகு தோனி, ஓய்வு முடிவு குறித்து உடல் ஒத்துழைத்தால் ரசிகர்களுக்காக இன்னும் ஒரு சீசன் விளையாடுவேன் என கூறியுள்ளார்.
மழைக்கு பிறகு நேற்று ரிசர்வ் டே-யில் குஜராத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி ஐபிஎல் வரலாற்றில் 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. குஜராத் அணி முதலில் பேட் செய்து 20 ஒவர்களில் 214 ரன்கள் குவித்தது. அதன்பிறகு சென்னை அணி பேட் செய்ய வரும் போது மழை குறுக்கிட்டு ஆட்டம் நள்ளிரவு 12.10 க்கு மீண்டும் தொடங்கியது.
ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு டக்வர்த் லூயிஸ் விதிப்படி சென்னை அணிக்கு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சென்னை அணி வெற்றிக்காக குறிப்பாக கேப்டன் தோனிக்காக அணியின் வீரர்கள் கடுமையாக போராடினர் என்றே கூறலாம். தோனிக்கு இது கடைசி ஐபிஎல் ஆக இருக்கும் பட்சத்தில் அவருக்கு கோப்பையை பரிசாக அளிக்க வேண்டும் என அணியின் வீரர்கள் குஜராத்தின் பந்துவீச்சு சவால்களை சமாளித்து 5-வது முறையாக வெற்றி கோப்பையை வென்றெடுத்தனர்.
வெற்றிக்கு பிறகு பேசிய தோனி, ஓய்வு பெற இது தான் சரியான தருணமாக இருக்கிறது. அப்படி எல்லாருக்கும் நன்றி கூறிவிட்டு எளிதாக ஓய்வு பெற முடியும், ஆனால் ரசிகர்கள் எனக்கு காட்டிய அன்பு மிகவும் அளவு கடந்தது. நான் எங்கு சென்றாலும், எந்த மைதானத்தில் சென்று விளையாடினாலும் என் மீது அவர்கள் செலுத்தும் அன்புக்கு எல்லையில்லை.
ஆனால் கடினமான ஒன்று என்னவென்றால் இன்னும் 9 மாதங்கள் தீவிரமாக பயிற்சி செய்து அடுத்த ஒரு ஐபிஎல் சீசன் விளையாடுவது தான். எது எப்படியிருந்தாலும் என் உடல் ஒத்துழைக்கவேண்டும். எனக்கு ஓய்வு குறித்து முடிவு செய்ய இன்னும் 6-7 மாதங்கள் இருக்கின்றன. அப்படி நான் அடுத்த ஐபிஎல் சீசன் விளையாடுவதாக இருந்தால் அது ரசிகர்களுக்கு நான் தரும் அன்பு பரிசாக இருக்கும். ஆனால் அது எளிதான ஒன்றாக இருக்கப்போவதில்லை.
எனக்கு அவர்கள் கொடுத்த அன்பு மற்றும் பாசத்திற்கு நான் எதாவது செய்யவேண்டும் என நினைக்கிறேன், அதற்கு அடுத்தவருட ஐபிஎல் தொடரில் நான் விளையாடி என்னிடம் இருந்து ரசிகர்களுக்கு நான் பரிசு கொடுக்க விரும்புகிறேன் என கூறியுள்ளார். இதனால் அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது, எனினும் தோனி விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து, அவர் கூறியது போல் இன்னும் 6-7 மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…