[FILE IMAGE]
2007 டி20 உலகக்கோப்பை வெற்றி குறித்து ரசிகர் ஒருவர் பதிவிற்கு இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பதில்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கிய இந்திய மோசமான தோல்வியை சந்தித்தது. இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாகவே ஐசிசி தொடரில் வெற்றி பெற முடியாமல் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. அந்தவகையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு சென்ற இந்திய அணி மீண்டும் ஒருமுறை ஏமாற்றத்தையே அளித்தது.
முன்பு விராட் கோலியின் கேப்டன்சி சரியில்லை, இதனால் தான் இந்திய அணி தோல்வியை சந்திக்கிறது என்று பலரும் விமர்சித்து வந்த நிலையில், பின்னர் ரோகித் சர்மா கேப்டனாக வந்த பிறகும் ஐசிசி தொடர்களில் இந்திய அணியின் அதே நிலையில் தான் உள்ளது எனவும் கூறி வருகின்றனர். இதன் காரணமாக பலரும் தோனியின் கேப்டன்சியை பாராட்டி வருகின்றனர்.
ஏன்னெனில், டி20 உலகக்கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என அடுத்தடுத்து ஐசிசி டிராபிகளை வென்று காட்டியவர் தோனி மட்டுமே. இவரின் வழிநடத்தல், கட்டமைப்பு மற்றும் போட்டி வியூகம் என கேப்டன்சியில் கலக்கியவர் இப்பவும் ஐபிஎல் தொடரிலும் கலக்கி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். இதனால் தோனியை போல் மீண்டும் ஒரு கேப்டன் இந்திய அணிக்கு கிடைப்பாரா என்ற ரசிகர்கள் பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், 2007 டி20 உலகக்கோப்பை வெற்றி குறித்து ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், பயிற்சியாளர் இல்லை, ஆலோசகர் இல்லை, சீனியர் வீரர்கள் இல்லை, கேப்டன்சி அனுபவம் என எதுவும் இல்லை. இதற்கு முன் எந்த ஒரு போட்டியிலும் கேப்டனாக இருந்ததில்லை. ஆனால், கேப்டனான 48 நாட்களில் இளம் வீரர்களுடன் சென்று நல்ல ஃபார்மில் இருந்த ஆஸ்திரேலிய அணியை அரையிறுதியில் வீழ்த்தி, டி20 உலகக்கோப்பையும் வென்றார் கேப்டன் தோனி என்று கருத்து பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்து கோபமடைந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், அந்த ட்விட்டை டேக் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். ஹர்பஜன் சிங் பதிவில், ஆமாம்.. இந்தப் போட்டிகள் நடைபெற்றபோது, இந்தியாவில் இருந்து தனியாக சென்ற ஒரு இளம் வீரர் மட்டும் தான் விளையாடினர். அணியில் மற்ற 10 வீரர்கள் விளையாடவே இல்லை. அதனால், தோனி மட்டுமே தனியாக உலக கோப்பை கோப்பையை வென்றார்.
ஆஸ்திரேலியா அல்லது வேறு நாடுகள் உலகக்கோப்பையை வென்றால், அந்த நாடுகள் வென்றது என தலைப்பு செய்தி ஆகிறது. ஆனால், இந்தியா வென்றால் மட்டும், அதை கேப்டனின் வெற்றியாக பார்க்கிறார்கள். கிரிக்கெட் என்பதே ஒரு குழு விளையாட்டு, நாங்கள் ஒன்றாக எப்படி வெல்கிறோமோ, அதேபோல் ஒன்றாகவே தோற்கவும் செய்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
ஹர்பஜன் சிங் பதிவிற்கு ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதாவது, ஒரு கோப்பையை வெல்வதற்கு 10 வீரர்களின் ஒத்துழைப்பும் கண்டிப்பாக தேவைதான். ஆனால், மற்ற 10 வீரர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக் கொண்டு வருவதுதான் கேப்டன்சியின் வேலை, அதேவே திறமை. இதற்கு மற்றொரு பெரும் எடுத்துக்காட்டு, 41 வயதிலும் சிஎஸ்கே அணி வீரர்களிடம் திறமையை வெளிக் கொண்டு வந்து கோப்பையை வெல்ல வைத்தது தான் என்கிறார்கள்.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…