2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இரு அணிகள் மோதும் இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் இழந்த பாகிஸ்தான் முதலில் பந்துவீசுகிறது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. ஜானி பேர்ஸ்டோவும், டேவிட் மலனும் இணைந்து சிறப்பாக விளையாடி வந்த போது இப்திகார் அகமது இவர்களின் பார்ட்னர்ஷிப்பை முறியடித்தார். இதன் காரணமாக டேவிட் மலன் 39 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதனால் இங்கிலாந்து அணி முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தனர்.
பின்னர் ஜோ ரூட் களமிறங்க அதிரடியாக விளையாடி வந்த ஜானி பேர்ஸ்டோ அரைசதம் அடித்து 59 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் களத்தில் இருந்த ஜோ ரூட் உடன் கூட்டணி அமைத்தார். இவர்களின் விக்கெட்டைப் பறிக்க பாகிஸ்தான் அணி திணறி வந்தது. இதில் அதிரடியாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 76 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் விளாசி 84 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இவர்கள் இருவரின் கூட்டணியில் 132 ரன்கள் சேர்க்கப்பட்டது.
மறுபிறும் விளையாடி வந்த ஜோ ரூட் அடுத்து இரண்டு ஓவரில் அரைசதம் அடித்து 60 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹாரி புரூக் வந்த வேகத்தில் அதிரடி காட்டி 30 ரன் எடுத்து வெளியேறினார். இருப்பினும் மறுபுறம் விளையாடிய கேப்டன் ஜோஸ் பட்லர் 27 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த அனைத்து வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேற இறுதியாக இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டைகளை இழந்து 337 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் அணியில் ஹாரிஸ் ரவுஃப் 3 விக்கெட்டையும், முகமது வாசிம், ஷாஹீன் அப்ரிடி தலா 2 விக்கெட்டையும் பறித்தனர்.
இங்கிலாந்து அணி ஏற்கனவே அரையிறுதிப் போட்டியிலிருந்து முற்றிலும் வெளியேறியுள்ளது. இருப்பினும், மறுபுறம் விளையாடி வரும் பாகிஸ்தானும் தற்போது வெளியேறிவிட்டது. பாகிஸ்தான் அரையிறுதிக்குள் நுழைய வேண்டும் என்றால் முதலில் இறங்கிய இங்கிலாந்தை கீழ்கண்ட ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டையும் வீழ்த்தி அந்த இலக்கை கீழ்கண்ட ஓவருக்குள் பாகிஸ்தான் அடிக்க வேண்டும்.
இங்கிலாந்து அணி நிர்ணயித்த 338 ரன்களை 6.1 ஓவரில் அடிப்பது என்பது மிக மிக கடினம் என்பதால் நடப்பு உலகக்கோப்பையில் இருந்து பாகிஸ்தான் வெளியேறியது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…