#RSAvSL: மூன்று பேர் அதிரடி சதம்.. வரலாறு படைத்த தென்னாப்பிரிக்கா! இலங்கைக்கு இமாலய இலக்கு நிர்ணயம்!

Published by
பாலா கலியமூர்த்தி

ஐசிசியின் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கியது. உலகக்கோப்பை தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதின. இதில், நியூசிலாந்து அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. இதன்பின் நேற்று, இரண்டாவது லீக் போட்டியில், நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில், பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதனைத்தொடர்ந்து இன்று சனிக்கிழமை தென்னாப்பிரிக்கா vs இலங்கை,  பங்களாதேஷ் vs ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீச்சை செய்தது. இதில், 6 விக்கெட் விதியத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வங்கதேச அணி வென்றது. இந்த நிலையில், இரண்டாவது (4வது லீக்) போட்டி தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை இடையே நடைபெற்று வருகிறது.

டெல்லியில் அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி தொடக்க வீரரில் ஒருவரான கேப்டன் தேம்பா பவுமா 8 ரன்களில் விக்கெட்டை இழந்தார். ஆனால், மறுபக்கம் நட்சித்திர வீரர் குயின்டன் டி காக் நிதானமாக விளையாடி 84 பந்துகளில் ( 3 சிக்ஸ், 12 பவுண்டரி) சதம் அடித்து விக்கெட்டை இழந்தார்.

பின்னர் ராஸ்ஸி வான் டெர் டுசென் ஒருபக்கம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் அவருடன் களத்தில் இருந்த ஐடன் மார்க்ராம் அதிரடியாக விளையாடி 54 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனிடையே, வான் டெர் டுசெனும் சிறப்பாக விளையாடி தனது சத்தை பூர்த்தி செய்து, 110 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதன்பின் வந்த ஹென்ரிச் கிளாசென் 32, டேவிட் மில்லர் 39 ரன்கள் எடுத்தனர்.

எனவே, தென்னாபிரிக்காவில் குயின்டன் டி காக், வான் டெர் டுசென் மற்றும் ஐடன் மார்க்ராம் ஆகிய மூவரும் அதிரடியான சதம் விளாசி இலங்கைக்கு ஒரு இமாலய இலக்கை நிர்ணயிக்க வழிவகுத்தனர். இறுதியாக 50 ஓவர் முடிவில் தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட் இழப்புக்கு 428 ரன்களை குவித்துள்ளது. இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக தில்ஷான் மதுஷங்க 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத்தொடர்ந்து, தென்னாபிரிக்கா அணி நிர்ணயித்த 429 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்கியுள்ளது.

இதனிடையே, 50 ஓவர் உலககோப்பை வரலாற்றில் அதிகபட்ச ரன்களை அடித்த அணி என்ற வரலாறு படைத்தது தென்னாப்பிரிக்கா. கடைசியாக 2015ம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி அடித்திருந்த 417 ரன்களே அதிகபட்சமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

36 minutes ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago