ICCUnder19WorldCup2024 : இன்று நடைபெறும் 3 போட்டிகள்!

Published by
பால முருகன்

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை (ICC Under 19 World Cup 2024) கிரிக்கெட் தொடர் நேற்று முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. நேற்று ஜனவரி (19) 2 போட்டிகள் நடைபெற்றது. ஒரு போட்டியில் அயர்லாந்து vs அமெரிக்கா அணியும், மற்றோரு போட்டியில் தென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதியது.

அமெரிக்காவை பந்தாடி அயர்லாந்து அசத்தல் வெற்றி..!

இதில் அயர்லாந்து vs அமெரிக்கா அணியும் மோதிய போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதைப்போலவே, தென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 31 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிபெற்றது.

தென்னாப்பிரிக்கா திரில் வெற்றி ! ஆண்ட்ரூவின் சதம் வீணானது..!

அந்த போட்டிகளை தொடர்ந்து இன்றயை தினமான ஜனவரி 20-ஆம் தேதி 3 போட்டிகள் நடைபெறவுள்ளது. எந்தெந்த அணிகள் எல்லாம் இன்று விளையாடவுள்ளது என்ற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வங்காளதேசம் vs இந்தியா

இன்று நடைபெறவுள்ள ICC Under 19 World Cup 2024 தொடரின் 3-வது போட்டியில் வங்காளதேசம் அணியும் இந்திய கிரிக்கெட் அணியும் ப்ளூம்ஃபோன்டைனில் இருக்கும் மங்காங் ஓவல் மைதானத்தில் மோதுகிறது.

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்

  • ஆதர்ஷ் சிங், அர்ஷின் குல்கர்னி, முஷீர் கான், உதய் சஹாரன்(கேப்டன்), பிரியன்ஷு மோலியா, சச்சின் தாஸ், முருகன் அபிஷேக், ஆரவெல்லி அவனிஷ்(விக்கெட் கீப்பர்), நமன் திவாரி, ராஜ் லிம்பானி, சௌமி பாண்டே, ஆராத்யா சுக்லா, இன்னேஷ் மகாஜன், தனுஷ் கவுடா ருத்ரா படேல், பிரேம் தேவ்கர், முகமது அமான், அன்ஷ் கோசாய்

ஸ்காட்லாந்து vs இங்கிலாந்து

4-வது போட்டியில் ஸ்காட்லாந்து அணியும் இங்கிலாந்து அணியும் மோதுகிறது. இந்த போட்டி போட்செஃப்ஸ்ட்ரூமில் இருக்கும் சென்வெஸ் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.

பாகிஸ்தான்  vs ஆப்கானிஸ்தான்

5-வது போட்டியில் பாகிஸ்தான் அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதிக்கொள்கிறது. இந்த இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் போட்டி இன்று கிழக்கு லண்டனில் அமைந்து இருக்கும் Buffalo மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மூன்று போட்டிகளும் மதியம் 1.30 க்கு தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

4 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

4 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

5 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

5 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

6 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

8 hours ago