Dhoni ravi [Image- PTI]
ஐசிசி கோப்பைகளை வெல்வது எளிதான காரியம் என எண்ணும்படி தோனி செய்து விட்டார் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று ஆஸ்திரேலிய அணி முதன்முறையாக ஐசிசியின் அனைத்து விதமான கோப்பைகளையும் வென்ற அணி என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியது. இந்திய அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 164/3 ரன்களுடன் ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடங்கியதும் விக்கெட்கள் சீட்டுக்கட்டுகள் போல் சரிந்து வீழ்ந்தது.
சிறப்பான தொடக்கத்தை கொடுத்த விராட் கோலியும் 49 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஜடேஜா டக் அவுட் ஆகி வெளியேற இந்திய அணியின் நம்பிக்கையும் தளர்ந்தது. இறுதி நாளில் 280 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய அணி களமிறங்கி 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.
இந்த போட்டிக்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணி ஐசிசி கோப்பைகளை வெல்வது எளிதானது போல் முன்னாள் இந்திய கேப்டன் தோனி மாற்றிவிட்டார் என கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, இந்திய அணி கடந்த 2013இல் ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி வென்ற பிறகு 10 ஆண்டுகள் ஆகியும் ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்ல முடியாமல் திணறி வருகிறது.
ஆனால் எம்.எஸ். தோனி தலைமையில் இந்திய அணி 2007 இல் டி-20 உலகக்கோப்பை, 2011இல் ஒருநாள் உலகக்கோப்பை, 2013இல் சாம்பியன்ஸ் ட்ராபி என 3 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. ஐசிசி கோப்பைகளை வெல்வது எளிதான விஷயமல்ல ஆனால் தோனி அதனை எளிதானது போல் நமக்கு காட்டிவிட்டார் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ''பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிப்பதே…