10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கட்டுப்பாட்டு மையங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்தப்பட்டு,அவை செயல்பாட்டில் இருக்க வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும்,வினாத்தாள் கட்டுப்பாட்டு மையங்களில் காவலர் பணியில் இருக்க வேண்டும் எனவும்,இரட்டை பூட்டு கொண்டு வினாத்தாள் கட்டுகள் இருக்கும் அறை பூட்டப்பட்டிருக்க வேண்டும் எனவும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதே சமயம்,பொதுத்தேர்வு மையங்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே முதன்மை கண்காணிப்பாளராக இருக்க கூடாது எனவும்,தேவைப்பட்டால் மட்டுமே அரசு உதவி பெரும் பள்ளி ஆசிரியர்களை நியமித்துக் […]
தமிழகத்தில் உள்ள முக்கிய திருக்கோயில்களில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமிராக்களில் உள்ள குறைபாடுகளை 3 தினங்களுக்குள் சரிசெய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவு. இந்து சமய அறநிலையத்துறை ஒருங்கிணைந்த திருக்கோயில் மேலாண்மை திட்ட செயலாக்கத்தின் ஒருபகுதியாக தமிழகத்தில் உள்ள முக்கிய திருக்கோயில்களின் அன்றாட நிகழ்வுகளை கண்காணிப்பு கேமராக்கள் வழியாக நேரலையாக கண்காணித்திட ஆணையர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு 20.01.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதன்படி,கட்டுப்பாட்டு அறை பணிகள் நாள்தோறும் சிறப்பாக […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி,சென்னையில் 5,794 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல்கள் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக,அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி,ஒவ்வொரு கட்சியினரும் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு வருகின்றனர். மேலும்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட […]